Dry Rubble Masonry

dry rubble masonry

Dry Rubble Masonry – வீட்டின் அடித்தளத்தை கரடு முரடான கருங்கற்களை கொண்டு கலவை இன்றி இது போல அடுக்கி கட்டும் முறைக்கு தான் dry rubble masonry என பெயர்.

கரடு முரடான கற்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொள்வதால் கட்டிடத்திற்கு தேவையான பிணைப்பு கலவை இன்றி கிடைக்கிறது.

கேரளாவில் இம்முறையில் இன்றும் அடித்தளம் அமைக்கிறார்கள்.

இதற்கு சிமெண்ட் இல்லை,
மணல் இல்லை,
மண் தேவை இல்லை,
ஏன் தண்ணீர் கூட தேவை இல்லை.
ஆனால் இதை கட்ட சரியான வேலையாட்கள் தேவை.

கலவை கொண்டு கட்டும் கட்டிடம் எவ்வளவு உறுதியானதோ அதே அளவு இதுவும் உறுதியானது.

நன்றி,
பொறி.ஹரி