சுண்டைக்காய்_பத்திய_சாப்பாடு

#சுண்டைக்காய்_பத்திய_சாப்பாடு #கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐~~~~~~~🍁🍃~~~~🍁🍃~~~~~~~
சில பேர் கோபத்தில் யாரையாவது திட்டும்போது, அவன் கிடக்கிறான்,
#சுண்டைக்காய்_பயல்_என்று_திட்டு வாங்குபவர்களை ஏளனப்படுத்தும் வார்த்தை எனக் கருதி கத்துவார்கள்.

உண்மையில், அவர்கள் அந்த சுண்டைக்காய் பயல்களை கோபத்தில் ஏளனப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்களை மிக மிக உயர்வாக வாழ்த்தி இருக்கிறார்கள், என்பதுதான் உண்மை.

சுண்டைக்காய் தானே வளரும் ஒரு செடியினம், காடுகளிலும் சில வயல்வெளிகளிலும் அதிகம் காணப்படும், வீடுகளில் நட்டு வைத்தாலும், விரைவில் வளரும் தன்மையுடையது.

#இவற்றின்_மலர்களும்_காய்களும்_கொத்துக் கொத்தாக வளர்வதைக் காணவே, அற்புதமாக இருக்கும்.

உண்மையில், அந்த சுண்டைக்காயில் நிறைய நன்மைகள் நிறைவாக இருக்கிறது, ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் வாருங்கள்.

#ரத்தசோகை_குணப்படுத்தும்

இயல்பான இரும்புச்சத்து காரணமாக சுண்டைக்காய், உடலின் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கச்செய்து, நோய் அதிர்ப்பு சக்தியை உடலில் கூடுதலாக்கி அதோடு இரத்த சோகை நோயையும் போக்கும் ஆற்றல் மிக்கது.

#கொழுப்பை_கரைக்கும்

இரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புகளைக் கரைத்து, செயற்கை வகை உணவுகளால் உடலில் சேர்ந்த நச்சுக்களை, வெளியேற்றும் தன்மை கொண்டது.
இரத்தத்தை சுத்திகரித்து, உடல் நடுக்கம், மயக்கம் மற்றும் உடற்சோர்வு நீக்கும். மூச்சுக் கோளாறு பிரச்னைகள் உள்ளவர்கள் சாப்பிட்டுவர, வளங்கள் தெரியும்.
இரசாயன வகை உணவுகளால் வயிற்றில் தங்கும் அசுத்தக் கிருமிகளை அழித்து வெளியேற்றும், வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும்.

#எலும்பு_வளர்ச்சி :-

குழந்தைகளின் உடல், எலும்பு வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு முக்கிய காரணியாகும் .உடல் வலி, உடல் சோர்வு, வயிற்றில் பூச்சிகளால் உண்டான வலிகள் மற்றும் மலச்சிக்கல் போக்கும். வயிற்றுப் புண்களை போக்கும். இரத்த சுகர் அளவை கட்டுப்படுத்தி சீராக்கும்.

#சுண்டைக்காய்_வற்றல்:-

கொஞ்சம் பெரிதான சுண்டைக்காய்களை சற்றே கீறி, நன்கு அலசி, அவற்றை சில நாட்கள் மோரில் ஊற வைத்து, பிறகு அந்த காய்களை மோரிலிருந்து எடுத்து, அவற்றை மீண்டும் சில நாட்கள் தினமும் வெயிலில் காய வைத்து வர, சுண்டைக் காய்கள் எல்லாம் சுருங்கிப் போகும்.
நன்றாக சுருங்கியபின், அவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு பத்திரப் படுத்தி, தேவைப்படும் சமயத்தில் எடுத்து சுண்டைக்காய் வற்றல் குழம்பாகவோ அல்லது எண்ணையில் வறுத்தோ சாப்பிடலாம்.
சுண்டைக்காய் வற்றல் குழம்பை சாதத்தில் பிசைந்தோ அல்லது சுண்டைக்காய் வற்றலை சாதத்திற்கு தொட்டோ சாப்பிடலாம். இவற்றால், ஆஸ்துமா குணமாகும் மற்றும் வயிற்று அசுத்தங்கள் நீங்கி வயிறு தூய்மையாகும் மற்றும் செரிமான, வாயுக் கோளாறுகளை சரிசெய்யும்.

#சுண்டைக்காய்_பத்திய_சாப்பாடு:

குழந்தை பெற்ற பெண்களுக்கு, முன்பெல்லாம் பத்திய சாப்பாட்டில், சுண்டைக்காயும் சேர்ந்திருக்கும். சுண்டைக்காயின் தாய்ப்பால் சுரக்கவைக்கும் திறன் மற்றும் செரிமானக் கோளாறுகள் நீக்கி, உடல் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றும் தன்மைகளால் தான் முன்னரெல்லாம், குழந்தை பெற்ற பெண்களுக்கு பத்திய சாப்பாட்டில் சுண்டைக்காயை சேர்த்து வந்தனர்.
இப்போது பத்தியமும் இல்லை! சுண்டைக்காயும் இல்லை!
முன்னோர் சொல்லியதெல்லாம், நம் நன்மைக்கே என்றெண்ணி, அதன்படி நடந்து வந்தால், நோய்களின்றி நலமுடன் வாழலாம்.

மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்

மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்

1)வேளாண் அறிவியல் நிலையம்,
திரூர் – 602 025
திருவள்ளூர் மாவட்டம்
தொலைபேசி :044 – 27697394
தொலை நகல்:044 – 27620705

2)வேளாண் அறிவியல் நிலையம் KVK
கட்டுப்பாக்கம் – 603 203.
கட்டன் கொளத்தூர் அஞ்சல்
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி :044 – 27452371

3)வேளாண் அறிவியல் நிலையம்,
விரிஞ்சிபுரம் – 632 104
வேலூர் மாவட்டம்
தொலைபேசி :0416 – 2272221

4)வேதபுரி வேளாண் அறிவியல் நிலையம் கில்நேலி கிராமம்,
சித்தத்தூர் (அஞ்சல்),
செய்யூர் – 604 410.
திருவண்ணாமலை மாவட்டம்
தொலைபேசி :04182 – 247271

5)டாக்டர். பெருமாள் வேளாண் அறிவியல் நிலையம்
எலுமிச்சங்கிரி கிராமம்,
மல்லிநாயனப்பள்ளி அஞ்சல்,
கிருஷ்ணகிரி – 621 313.
தொலைபேசி :04343 – 268613

6)வேளாண்மை அறிவியல் நிலையம்
மாநில விதை பண்ணை
பாப்பாரபட்டி – 636 809
தர்மபுரி மாவட்டம்.
தொலைபேசி – 04342 – 248040

7)வேளாண்மை அறிவியல் நிலையம்
சந்தியூர் – 636 203
மல்லூர் (வழி)
சேலம் மாவட்டம்
தொலைபேசி -0427 – 2422550

8)வேளாண்மை அறிவியல் நிலையம்
விருத்தாசலம் – 606 001
கடலூர் மாவட்டம்
தொலைபேசி -04143-238353

9)ஹான்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் நிலையம்
வலிக்கன்டபுரம்,
பெரம்பலூர் – 621 115.
தொலைபேசி :04328 – 293251,293592

10)வேளாண் அறிவியல் நிலையம் KVK
கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகம்,
நாமக்கல் – 637 002.
தொலைபேசி :04286 – 266345

11)மைரடா வேளாண் அறிவியல் நிலையம் 57, பாரதி தெரு,
கோபிச்செட்டிபாளையம் – 638 452.
ஈரோடு மாவட்டம்
தொலைபேசி : 04285 – 226695

12)அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையம்,
விவேகானந்த புரம் – 641 113.
சிலியூர் (வழி), காரமடை பிளாக்,
கோவை மாவட்டம்.
தொலைபேசி :04254 – 284223

13)வேளாண் அறிவியல் நிலையம்,
சிறுகமணி – 641 113
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொலைபேசி :0431 – 2614417

14)பக்தவச்சலம் நினைவுக் குழு வேளாண் அறிவியல் நிலையம்
உசிலம்பட்டி (அஞ்சல்),
சென்சிப்பட்டி வழி,
தஞ்சாவூர்.
தொலைபேசி :04362 – 221474

15) வேளாண் அறிவியல் நிலையம்,
காந்திகிராம் கிராமப்புற நிறுவனம்,
காந்திகிராம் – 624 302.
திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி :0451 – 2452168

16)வேளாண்மை அறிவியல் நிலையம்
தேசிய பயிர் வகை ஆராய்ச்சி மையம்
வம்பன் காலனி P.O.
புதுக்கோட்டை
தொலைபேசி – 04322 – 290321

17) வேளாண்மை அறிவியல் நிலையம்
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மதுரை – 625 104
தொலைபேசி -0452 – 2422955

18)வேளாண் அறிவியல் நிலையம் KVK
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம்
குன்றக்குடி – 630 206.
சிவகங்கை மாவட்டம்
தொலைபேசி : 04577 – 264288

19)சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம் மேற்குத் தெரு,
காமாட்சிபுரம் (எஸ். ஓ)
தேனி மாவட்டம் – 625 520. தொலைபேசி :04546 – 247564

20) வேளாண் அறிவியல் நிலையம்
கோவிலாங்குளம்
அருப்புகோட்டை – 626 107
விருதுநகர் மாவட்டம்..
தொலைபேசி :04566 – 220562

21)வேளாண்மை அறிவியல் நிலையம்
கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம்
ஆட்சியார் அலுவலக வளாகம்
இராமநாதபுரம் மாவட்டம்.. தொலைபேசி -04567 – 230250

22)ஸ்கேட் வேளாண் அறிவியல் நிலையம் முடிவைத்த
நென்டல் (அஞ்சல்)
வாகைக்குளம் – 628 102.
தூத்துக்குடி மாவட்டம்
தொலைபேசி :0461 – 2269306

23) ஆர். வி. எஸ். வேளாண் அறிவியல் நிலையம் ஊர்மேல் அழகியன் (பி பி ஓ)
ஆயுர்குடி (அஞ்சல்),
தென்காசி – 627 852.
திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி :04633 – 240550

24)வேளாண்மை அறிவியல் நிலையம்
பேச்சிபாறை – 629 161
கன்னியாகுமரி மாவட்டம்
தொலைபேசி – 04651 – 281192
K
25)வேளாண் அறிவியல் நிலையம்,
நீடாமங்கலம் – 614 404
திருவாரூர் மாவட்டம்
தொலைபேசி :04367 – 260666

26) வேளாண்மை அறிவியல் நிலையம்
சிக்கல் – 611 108
நாகப்பட்டினம் மாவட்டம்
தொலைபேசி :04365 -246266

விரலை வெட்ட வேண்டாம்

விரலை வெட்ட வேண்டாம்

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என

ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

.சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்

அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை
இதற்க்கு கண்கண்ட மருந்து .

ஆவாரம் இலை,

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இது எனது தாயாருக்கு
என்கையாலே செய்து,
அந்த புண்கள் ஆறியபிறகு நான்பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள்
இதை அதிகம் பகிா்ந்து பலாின்
கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!

நன்றி : Parimala Devi
Dr Kala GH, Sengottai

சொர்க்க மரம்

சொர்க்க மரம் Simarouba glauca
சொர்க்க மரம்:
தாவரப் பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca)
குடும்பம்: சைமரூபேசியே

 

பரவல்:

மத்திய அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும். பல பயன்கள் கொண்ட இம்மரம் திறன்குறைந்த மண்களில் கூட நன்கு வளரும். விளைநிலம் மற்றும் தரிசு நிலங்களிலும் வளர்ப்பதற்கு ஏற்றதாகும்.

தேவையான சூழல்:
தட்பவெப்பநிலை:

கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 1000 மீ வரை வளரக்கூடியது. ஆண்டு சராசரி வெப்பநிலை 17-35 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆண்டு சராசரி மழையளவு 500-2200 மி.மீ ஆகும்.

மண் வகை:

நல்ல வடிகால் உள்ள கார அமிலத்தன்மை 5.5 – 8.0 வரை உள்ள அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. ஆயினுள் 1.0 மீ ஆழமுள்ள மண்வகை இதன் வளர்ச்சிக்கு சிறந்தது. ஆழம் குறைந்த பாறைகள் கொண்ட இடங்கள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

வளர்ச்சி நிலை:

இம் மரம் மூன்று வருடங்களில் பூத்து காய்க்கும் தன்மை வாயந்ததாகும். வருடத்தில் ஒரு முறை, டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் பூக்கும். 4-6 வருடத்தில் காய்க்கத் தொடங்கி மேலும் 4-5 வருடங்களில் நிலையான காய்ப்புத்தன்மை அடைந்துவிடும். கீழே விழும் காய்கள் (இளஞ்சிவப்பு வகைகளில் கரு ஊதா நிற காய்கள் மற்றும் பச்சை வகைகளில் வெளிர் பழுப்பு நிற காய்கள்) மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். இடத்தின் சூழல் மற்றும் தட்பவெப்ப நிலையினை கொண்டு காய்க்கும் பருவகாலம் மற்றும் வளர்ச்சி காலம் வேறுபடும். காய்காய்த்து பின் வளர்ச்சியடைந்து பழுப்பதற்கு 1-2 மாதங்கள் ஆகும். காயானது நீள்வட்ட வடிவத்தில், 2-2.5 செ.மீ நீளம் கொண்டு, மெல்லிய கடின மேல்தோலுடன், சாறு போன்ற சதைப்பகுதியுடன் இருக்கும்.

மரத்தின் வளர்ச்சி:

அசெய்டுனோ, சைமரூபா அல்லது சொர்க்க மரம் என்று பொதுவாக அழைக்கப்படும் இம்மரம் நடுத்தர அளவுடனும், பசுமை மாறா தன்மையுடனும் (7-15 மீ உயரம்), ஆணிவேர் மற்றும் நீள உருளை வடிவ தண்டுடன் இருக்கும். மத்திய அமெரிக்காவின் எல் சால்வடோர் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும்.

கால்நடைகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இம்மரத்தினை உண்காது என்பதால் இதற்கு தனிகவனம் தேவையில்லை (ஷ்யாம் சுந்தர் ஜோஷி மற்றும் குழு 1996).

பயன்கள்:

சைமரூபா மரத்தின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதன் விதைகளில் 50-65 சதவிகிதம் உண்ணக்கூடிய எண்ணெய் இருப்பதனால் “வனஸ்பதி” என்ற சமையல் எண்ணெய் தயாரிக்க உபயோகப்படுகின்றது.

1950ம் வருடம் முதல் எல்சால்வடோர் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இந்த எண்ணெய் உணவு பயன்பாட்டிற்காக மன்டியா வெஜிடல் “நைவ்” (Manteea Vegetal ‘Nieve’) என்ற பெயரில் தயாரிக்கப்படுகின்றது.

தொழிற்சாலைகளிலும், தரமான சோப்புகள், உயவுப் பொருள்கள், சாயம், மெழுகூட்டு, மருந்துப்பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இவ்வெண்ணெய் உபயோகப்படுத்தப்படுகின்றது. (ஷ்யாம்சுந்தர் ஜோஷி மற்றும் சாந்தா ஹையர்மத், 2000).

எண்ணெய் தயாரிப்பில் கிடைக்கும் புண்ணாக்கில் அதிக சதவிகிதம் புரதச்சத்து (64%) இருப்பதால் அவற்றில் உள்ள நச்சுப்பொருட்கள் நீக்கப்பட்டு கால்நடை தீவனமாகும் இயற்கை உரமாகவும் உபயோகப்படுத்துகின்றது.

காய்களின் உள்பகுதி அட்டை தயாரிப்பில் பயன்படுகின்றது. பழத்தின் 60 சதவிகிதம் பழக்கூழ் என்பதால் அதனில் 11 சதவிகிதம் சர்க்கரைச் சத்து உள்ளதாலும் பழச்சாறு மற்றும் நொதித்தல் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

இதன் இலை குப்பை மண் புழுக்களுக்கு சிறந்த உணவு என்பதால் நல்ல உரமாக பயன்படுகின்றது. இலை மற்றும் மரப்பட்டைகளில் ‘குவர்சின்’ என்ற வேதிப்பொருள் அமீபியாசிஸ், வயிற்றுப்போக்கு மற்றும் அலேரியா போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

இயற்கையாக வளர்த்தல்:

பறவைகள் மற்றும் குரங்குகள் இப்பழத்தினை உண்டு போடும் எச்சங்களின் மூலம் தானாகவே ஊன்றி இவ்விதைகள் முளைக்கும். ஆயினும் இயற்கையாக வளர்ச்சி இம்மரத்தில் குறைவே ஆகும்.

செயற்கையாக வளர்த்தல்; விதை முதிர்ச்சி மற்றும் விதை சேகரிப்பு:

பூத்தபின் 11-13 வாரங்களுக்கு பிறகு சைமபோ காய்கள் அதிகப்பட்ட எடையுடன், நன்கு வளர்ந்த உட்கரு மற்றும் கடின நார்போன்ற உள்பகுதியுடன் இருக்கும். இதுபோன்ற பழங்கள் மரத்திலிருந்து தானே விழுந்துவிடும். இந்நிலையில் உள்ளவை வினையியல் முதிர்ச்சி பெற்று அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்டவையாக கருதப்படுகின்றன. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஓர் ஆராய்ச்சியில் பூத்தபின் 13 வாரங்களுக்கு பிறகு காய்கள் ஊதா நிறம் அடைந்தவுடன் விதைகள் வினையியல் முதிர்ச்சி பெற்றவையாக கருதப்படுகின்றன.

காய்கள் பச்சை மஞ்சள் நிறத்திலிருந்து கரு ஊதா நிறம் மாறியவுடன் சேகரிக்கலாம். காய்கள் மரத்திலிருந்து பறிப்பதே சிறந்தது. ஏனெனில் கீழே விழுந்த பின்னர் மண் பூஞ்சாண்களின் தாக்குதல் ஏற்படுகின்றது. காய்களின் பூஞ்சாண்கள் விதைகளையும் தாக்கி சேதப்படுத்துகின்றன. காய்களின் சதைப்பகுதி மாவுச்சத்து நிறைந்துள்ளதால் அவை கீழே விழுந்த சில மணி நேரங்களிலேயே பூஞ்சாண் தாக்குதல் ஏற்படுகின்றது. மரங்களின் அடியில் ஒரு தார்பாலின் விரிப்பை விரித்து மரத்தினை உலுக்கியோ (அ) காய்களை உருவுவதோ (அ) கிளைகளை அடித்தோ காய்களை உதிரச்செய்து சேகரிப்பது சிறந்த முறையாகும்.

விதை பிழிந்தெடுத்தல்:

நல்ல தரமான விதைகளுக்கான, காய்களை வளர்ச்சியடையாத முதிர்ச்சி பெறாத சிதைந்த மற்றும் அழுகியவற்றை தரம்பிரிக்க வேண்டும். மேலும் காய்களின் நிறங்கள் கொண்டு ழுமுமையான பச்சை, பச்சை மஞ்சள் மற்றும் அடர் ஊதா போன்றவற்றையும் பிரிக்க வேண்டும். பச்சை நிற காய்கள் தரம் குன்றியவை என்பதால் அவற்றை நிராகரிக்க வேண்டும்.

காய்களை சேகரித்தவுடன் சுத்திகரிப்பு செய்யும் இடங்களுக்கு அவற்றை சாக்குப்பைகளில் அனுப்ப வேண்டும். அங்கு காய்களின் சதைக்பகுதியை கைகளினாலோ, கருவி மூலமோ உடனடியாக பிடிய வேண்டும். கைகளினால் ஒரு வாளியல் காய்களை நன்கு பிழிந்தெடுக்க வேண்டும். இதன் மேல் நீர் ஊற்றினால் காய்களின் தோல் பகுதி வாளியின் மேலே மிதங்கும். விதைகளில் ஒட்டியுள்ள சிறிதளவு சதையுடன் மூங்கில் வாளிக்குள் வைத்து ஓடும் நீரில் நன்கு அலச வேண்டும். சிறிய அளவிளான விதைகளையே பிழிந்து நன்கு அலச வேண்டும். வாளியின் மேல் நிரம்பி வழியும் வரையில் விதைகளை எடுக்க கூடாது. அதே போல் நீண்ட நேரம் நீரினில் ஊறவைக்க கூடாது.

விதை உலர்த்துதல்:

விதைகளை எடுத்தவுடன் உடனடியாக சிலமணி நேரம் நிழலில் உலர்த்தி பின்னர் வெயிலில் உலர்த்த வேண்டும். இதனால் விதைகளின் ஈரப்பதம் குறையும். விதையின் மேல்புர ஈரத்தினை நன்கு பிழிந்து, அலசி பின்னர் உலர்த்தி குறைக்க வேண்டும். சேமிப்பு அறை ஈரப்பதம் நிறைந்து அடைத்து வைக்கப்பட்டிருந்தால் காற்றாடி உபயோகிக்கவேண்டும். விதைகளை குவித்து வைக்காமல், ஒரே அடுக்கில் பரப்பி வைக்க வேண்டும். விதையின் முதல் ஈரப்பதம் 12-15 சதவிகிதம் ஆகும்.

சேமிப்பு மற்றும் வீரியத்தன்மை:

இவை மென்தோல் விதைகள் என்பதால் குறைந்த வெப்பநிலையில் சேமித்தால் நீண்ட வருடங்களுக்கு அதிக வீரியத்தன்மையுடன் சேமிக்கலாம். அறையின் வெப்பநிலையில் காகிதப்பை (அ) துணிப்பைகளில் சேமித்தல் 9-12 மாதங்கள் வீரியத்தன்மை மாறாமல் சேமிக்கலாம். புதிய விதைகளின் முளைப்புத்திறன் 70-80 சதவிகிதம் ஆகும். விதைகளினுள் சதைப்பகுதி இருப்பதால் அவற்றின் மெல்லிய தோல் போன்ற மேல் பகுதியை பிரித்து வெயிலில் எண்ணெய் பிழிந்தெடுக்கும் வரையில் சேமிக்க வேண்டும். இப்படி செய்வதில் தாமதம் ஏற்பட்டால் எண்ணெயின் தரம் குறைந்து காணப்படும். எண்ணெய் எடுக்கும் முன்னர் விதைகளை உடைக்க வேண்டும்.

முன் நேர்த்தி:

விதைத்தூக்கம் இல்லையென்பதால் முன்நேர்த்தி எதுவும் தேவையில்லை. ஆயினும் நீரில் 12 மணிநேரம் ஊறவைப்பது முளைப்புத்திறனை அதிகரிக்கும்.

விதை தரம் பிரித்தல்:

விதைகளை தூய்மைப்படுத்தி உலர்த்திய பின்னர் அவற்றின் தரத்தினை மேலும் மேம்படுத்துவதற்காக அவற்றை நிலைப்படுத்த வேண்டும். இதற்கு நிரம்பாத, முதிர்ச்சியற்ற, உடைந்த (அ) பூச்சிகள் தாங்கி சேதமடைந்த விதைகளை களைந்தெடுக்க வேண்டும். நிரம்பிய மற்றும் நிரம்பாத விதைகளை அவற்றின் ஒப்பு அடர்த்தி வேறுபாடுகளை கொண்டு நீர் மிதவை முறையில் பிரித்தெடுக்க வேண்டும்.

 

அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது

அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது?

தயாரிக்க தேவையான பொருட்கள்
புகையிலை அரை கிலோ,
பச்சை மிளகாய் அரை கிலோ
வேம்பு இலை 5 கிலோ

பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர்

Continue reading

தீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை

தீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை..!!!

விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம்.

Continue reading