லாரிபேக்கர் முறையிலான வீட்டின் மற்றுமொரு புகைப்பட தொகுப்பு..
லாரிபேக்கர் முறையிலான வீட்டின் புகைப்பட தொகுப்பு

Learn Share Collaborate
லாரிபேக்கர் முறையிலான வீட்டின் மற்றுமொரு புகைப்பட தொகுப்பு..
எங்களிடம் மண் அல்லது மாற்றுக்கட்டுமானம் பற்றி கேட்கும் போது பேச்சு சிமெண்ட் அல்லது கான்கிரீட் பக்கம் திரும்பும்.நான் கட்டுமான துறையில் பணியாற்றும் போது எனக்குள் எப்போதும் ஒருவிதமான குழப்பம் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது. ஒரு விதமான குற்ற உணர்ச்சியே என்னை உறுத்தியது. ஏதோ தெரிந்தே பாவம் செய்கிற உணர்ச்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. நல்ல வேளை, இப்பொழுதெல்லாம் இதை நினைத்து தூக்கமிழப்பதில்லை.
ஒவ்வொரு புதிய கனவும் மெய்ப்படும் போதும் சரி, அது எதிர்பாராத விளைவுகளையும் நமக்கு பரிசாக தரும். எல்லா புதிய சிந்தனைகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள், கேள்விகள்,கேலிகள் எல்லாம் பரிச்சயமான ஒன்று. இதைத் தாண்டித் தாக்குப் பிடிக்கற சிந்தனைகள் மக்களால் ஏற்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து விடுகிறன
இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண் கட்டுமானங்களில் நீங்கள் – Adobe,SMB,Cob மற்றும் Rammed earth ஆகிய வார்த்தைகளை நீங்கள் ஏற்கனவே என் பதிவில் படித்திருப்பீர்கள். இந்தப்பதிவின் நோக்கம் உங்களை Rammed earth பற்றி மீண்டும் மறக்காமல் பரிச்சயப்படுத்துவது.
லாரிபேக்கரின் கட்டிட முறைகளையும் அவருடைய சிந்தனையையும் சொல்லி கொண்டே இருந்தாலும் அது நிச்சயம் முடியாத,தீராத ஒன்று…
அவருடைய சுவர் கட்டுமான அமைப்பில் முக்கிய பங்கு இந்த காம்போசிட் சுவருக்கு உண்டு.பல கட்டிட சுவர்களை பேக்கர் இம்முறையில் கட்டி உள்ளார்.
பெங்களூரை சேர்ந்த siddappa setty அவர்களுடைய சுழலுக்கேற்ற 2200 சதுரடி வீடு.
வீடு முழுக்க சுடப்படாத adobe மண் கற்களை கொண்டே கட்டப்பட்டு உள்ளது.
சுண்ணாம்பு மற்றும் மண் கலந்த கலவை கொண்டு கட்டப்பட்டு அதனைக்கொண்டே உள் பக்கமும் வெளி பக்கமும் பூச்சு வேலை செய்யப்பட்டு உள்ளது.
நம் வீடுகளில் பயன்படுத்தும் சேரமிக் டைல்ஸ்களால் வீட்டில் பெண்களுக்கு மூட்டு வலி,மற்றும் முதியோர்களுக்கு வழுக்கி விடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கு மிக சிறந்த செலவு குறைந்த மாற்று இந்த ஆக்ஸைடு வண்ணங்களை பயன்படுத்தி போடப்படும் சிமெண்ட் தளம் ஆகும்
வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல.
கேரளத்தில் பல பரம்பரைகளாக மரபுவழி மாறாமல் வாழ்ந்துவரும் குடும்ப வீடே நாலுகெட்டு வீடு. திருச்சூர், ஆலப்புழா, தளசேரி போன்ற இடங்களில் இந்த நாலு கெட்டு வீடுகளை அதிகமாகப் பார்க்கலாம்.
நான்கு அறைகளைக் கொண்டும் வீட்டின் நடுப் பகுதியில் நடு முற்றம் கொண்டும் இந்த வீடு அழகாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் மரத் தூண்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
முன்பகுதியில் விருந்தினர்கள் அமர்வதற்காக மரப் பலகையால் ஆன இருக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கை வளைவான மரப்பகுதி கொண்டு அழகாக்கப்பட்டிருக்கும்.
இதை ‘சாருபடி’ என அழைக்கிறார்கள். இந்த வீட்டின் உள்பகுதி வடக்கினி (வடக்கு), படிஞாற்றுனி (மேற்கு), கிழக்கினி (கிழக்கு), தெக்கினி (தெற்கு) ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பகுதிகளும் நடுமுற்றத்தில் வந்து முடியும். பொதுவாகக் கேரள வீடுகளில் முன் வாசலுக்கு நேர் எதிராகப் பின் வாசல் இருக்கும். பெரும்பாலும் எல்லா அறைகளிலும் ஜன்னல்கள் இருக்கும். இந்த நடுமுற்றம் மூலம் வெளிச்சமும் காற்றும் வீட்டுக்குள் தாராளமாக வரும்.
வீட்டைச் சுற்றி சுற்று வராந்தாவும் இருக்கும். இந்த வராந்தா முழுவதையும் மர வேலைப்பாடுகளால் ஆன சாருபடி சுற்றியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் இந்த வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். இந்தக் குளத்தை அணுகுவதற்கான பாதை இந்தச் சுற்று வராந்தாவிலிருந்து பிரிந்துசெல்லும்.
ஜன்னல்களும் கதவுகளும் பலா, மா, தேக்கு ஆகிய மரங்களின் பலகைகளால் உருவாக்கப்படும். இந்த நாலுகெட்டு வீடுகளில் சமையலறையிலிருந்து நீர் எடுக்கக் கூடிய வகையில் ஒரு கிணறு இருக்கும். இந்தக் கிணற்றின் அடித்தளத்தில் நெல்லிப் பலகை அமைந்திருக்கும். அந்தப் பலகை 30-40 வருடங்கள் ஆனாலும் சேதமடையாமல் உறுதியாக இருக்கும்.
நடுமுற்றத்திலும் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நடுவில் துளசி மாடம் இருக்கும். வீட்டின் உள்கட்டமைப்பு பாரம்பரியம் மாறாமல் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது வியக்கச்செய்கிறது. எல்லோரும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதற்கே இந்தக் கட்டமைப்பில் வீடுகள் கட்டப்பட்டன.
நாலுகெட்டு வீடு போலவே எட்டு அறைகளும் இரண்டு நடுமுற்றமும் கொண்டு அமைக்கப்பட்டவை எட்டுக்கெட்டு வீடுகள் எனவும், பதினாறு அறைகளும் நான்கு நடுமுற்றமும் கொண்டு அமைந்திருப்பது பதினாறுகெட்டு வீடு என்றும் அழைக்கப்படுகிறது.கேரள வீடுகளே தனி அழகு. இயற்கைச் சூழல் அழிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ நாலு கெட்டு வீடுகளே சிறந்தவை
தொடரும்…
ஹரி