இந்த செய்தியை அனுபவமுள்ளவர்கள் உறுதிபடுத்தவும்
“காய்கறி சாகுபடி பட்டம் “
எந்தெந்த பட்டத்துல எந்தெந்த காய்கறி சாகுபடி செய்யவேண்டுமென தெரிந்து கொள்வது காய்கறி வேளாண்மையை லாபகரமாக மாற்றும் :
மார்கழி ,தை ( ஜனவரி ):
கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள் .
தை, மாசி ( பிப்ரவரி ):
கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை , சுரை, கொத்தவரை, பீர்க்கன், கோவைக்காய், கீரைகள் .
மாசி, பங்குனி (மார்ச் ):
வெண்டை, பாகல், தக்காளி, கொத்தவரை, பீர்க்கன், கோவைக்காய்
பங்குனி, சித்திரை (ஏப்ரல் ):
செடிமுருங்கை, வெண்டை, கொத்தவரை
சித்திரை, வைகாசி (மே ):
கத்தரி, தக்காளி, கொத்தவரை
வைகாசி ,ஆனி (ஜூன் ):
கத்தரி, தக்காளி, கோவைக்காய், பூசணி, வெண்டை, கீரைகள் .
ஆனி, ஆடி (ஜூலை ):
மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி , வெண்டை, கொத்தவரை, தக்காளி
ஆடி, ஆவணி (ஆகஸ்ட் ):
முள்ளங்கி , பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை
ஆவணி ,புரட்டாசி (செப்டம்பர் ):
செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி , கீரைகள் , பீர்க்கன், பூசணி
புரட்டாசி , ஐப்பசி (அக்டோபர் ):
செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி
ஐப்பசி ,கார்த்திகை (நவம்பர் ):
கத்தரி, தக்காளி, முள்ளங்கி , பூசணி
கார்த்திகை , மார்கழி (டிசம்பர் ):
கத்தரி, சுரை, தக்காளி, முள்ளங்கி , பூசணி