Month: August 2019

பேராசையின் வெளிப்பாடுகள்

பேராசையின் வெளிப்பாடுகள்

“இயற்கை வளங்கள் இருவகைபடுகிறது. அதாவது இரும்பு, செம்பு, நிலக்கரி, எண்ணைய் போன்றவை நிலத்திற்கு அடியில் இருக்கும் வளங்கள். இவை அனைத்தும் எடுக்க எடுக்க குறைந்து கொண்டே போகும். இவை மீண்டும் தன்னுடைய அளவை அல்லது எண்ணிக்கையினை அதிகரித்து கொள்ள நெடுங்காலம் எடுத்து கொள்ளும். அரிசி, மரம், பழம், காய்கள் போன்றவை இன்னொரு வகையான இயற்கை வளங்கள். இது போன்ற பூமியில் விளையும் வளங்களை திரும்ப திரும்ப உற்பத்தி செய்து கொள்ளமுடியும். இவை புதுபிக்க கூடிய வளங்கள் (Renewable Energy) இன்று கூறப்படுபவை. இதில் முதலில் கூறப்பட்ட இயற்கை வளங்கள் பேராசையின் வெளிப்பாடுகள். அவை அனைத்தும் எடுக்கும் பொழுது அழிவிற்கும் வன்முறைக்குமே இட்டு செல்லும்

Continue reading

பவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன

கடந்த 15 நாட்கள் முன் வரை நிலத்தில் வறட்சியும் போர் கிணற்றில் நீரின்றியும் இருந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் வெள்ளமாக ஆற்றில் நீர் ஓடுகிறது.இன்னும் சில நாட்கள் ஓடும். அடுத்தவாரம் அங்கு மழைநின்ற பின் நவம்பர்
2 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரையில் உள்ள 70 நாட்கள் மிகுந்த வறட்சி இருக்கும்.

Continue reading

பூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை

பூச்சுவேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை 

நானாவது வீட்டை பாக்க வர நட்புகள்,உறவினர்கள் வீட்டு உரிமையாளரை கிண்டல் பண்ணிருவங்களோ என்று கதவு மற்றும் ஜன்னல் முனைகள்,கூரைகள்,பீம்கள்,ஷெல்புகள் என்று சில இடங்கள் மட்டுமாவது பூசிவிடுவேன்.சுவரையும் கொஞ்சம் மட்டமாக வேண்டும் என்பதற்காக “டேய் செங்கல்லை தூக்கு விட்டு கட்டு,லெவல் பாரு,ஒழுக்கமாக மட்டகோல் போடு என்று கத்தி கத்தியே நமக்கு பிபி எறிடும். 😂😂..செங்கல்லும் 10,12 ரூபாய்க்கு நல்ல கல்லாக வாங்குவேன்.அதனால் செலவை குறைக்க முடியவில்லை🙄🙄🙄

Continue reading

பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன்

கட்டிடக்கலையில் பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன் 

இப்போது வீடு கட்டும்போது நாம் பயன்படுத்தும் முறையை ஆர் சி என்கிறோம் . இம்முறைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று இன்னொரு முறையையும் சொல்லுவார்கள், இது மெட்ராஸ் டெர்ரஸ்.

Continue reading