நீர் மேலாண்மைத் தொடர்ச்சி
பயிர்களுக்கு பாசன நீர் கொடுக்கும் போது ஒவ்வொரு சாலிலும் பாசன நீர் கொடுத்தால் 100 சதம் தண்ணீர் கொடுக்கிறோம், இதற்கு பதிலாக ஒன்று விட்டு ஒரு சாலில் கொடுத்தால் அந்த தண்ணீர் இரண்டு பக்கமும் இருக்கும் தாவரங்களுக்கு கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு சாலிலும் தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று விட்டு ஒரு சாலில் தண்ணீர் கொடுத்தால் 50 சதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
பொதுவாக பாசனத்தின் போது 60 சதவீதம் தண்ணீர் ஆவியாகி விடுகிறது. மண்ணில் ஏற்படும் வெடிப்புகள் மூலமும் நீராவியாகிறது.
இதைத் தடுக்க காலியாக உள்ள சாலில் மூடாக்கு நிரப்பினால் மண்ணின் ஈரப்பதம் மண்ணிலேயே இருக்கும் நீர் நீராவியாகாது, மூடாக்கு பெரிய அளவில் தண்ணீரை சேமிக்கிறது.
இலைதழை மூடாக்கு போடும் போது இருவிதங்களில் பலன் தருகிறது, வேர் பகுதியில் கூடுதல் ஈரப்பதம் இருந்தாலும் அந்த கூடுதல் ஈரப்பதத்தை உறிஞ்சி. அதை காற்றில் வெளியேற்றும்,
வறட்சியில் தண்ணீர் பாற்றாக்குறை இருக்கும் போது மூடாக்கு காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி மண்ணில் சேர்க்கும்.
காற்று ஈரப்பதத்தின் கடலாகும், மழைக்காலத்தில் 90 சதத்திற்கு அதிகமான ஈரப்பதம் காற்றில் இருக்கிறது. அதாவது 100 லிட்டர் காற்று இருந்தால் அதில் 90 லிட்டர் ஈரப்பதம் இருக்கிறது. குளிர்காலத்தில் 65 சதவீதம் ஈரப்பதம் உள்ளது. கோடை காலத்தில் 25 முதல் 35 சதவீதம் ஈரப்பதம் காற்றில் உள்ளது.
காற்றில் உள்ள இந்த ஈரப்பதம் இலைதழை (சருகு) மூடாக்கு மற்றும் மட்கினால் மூலம் உறிஞ்சப்படுகிறது.
ஒரு கிலோ மட்கு காற்றில் இருந்து 6 லிட்டர் ஈரப்பதத்தை உறிஞ்சி சேமிக்கிறது. வேர்கள் மக்கில் இருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கின்றன.
உதாரணமாக ஒரு புல் கட்டை தோட்டத்தில் முதல நாள் மாலை வைத்துவிட்டு காலை 4 மணிக்கு தோட்டத்திற்கு சென்று அ;ந்த புல் கட்டைப் எடுத்துப் பார்த்தால் அதில் ஈரப்பதம் இருக்கும்.
அதற்கடியில் உள்ள மண்ணை விரல்களால் தொட்டுப்பார்த்தால் அதிலும் ஈரப்பதம் இருக்கும்.
மழை எதுவும் இல்லை நீர் பாசனமும் இல்லை எனினும் அந்த புல்லில் போதுமான ஈரப்பதம் இருக்கிறது. அப்படியானால் காய்ந்த புல் கட்டு காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது என்பது நிரூபணமாகிறது.
நாம் கவாத்து செய்த கிளைகளையும் இலை தழைகளையும் மூடாக்காக பயன்படுத்தினால் மூடாக்கின் தணணீர் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது.
எனவே மூடாக்கும் மட்கும் (Mulching and Humus) காற்றில் இருக்கும் கூடுதல ஈரப்பதத்தை உறிஞ்சி மண்ணில் சேர்க்கிறது.
*தண்ணீர் தண்ணீர்*
தண்ணீரை மனிதர்களால் உருவாக்க முடியாது, ஆனால் நிச்சயம் தணணீரை சேமிக்க முடியும்.
புவிவெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் வறட்சி இன்னும் மோசமாகும். மழை பொழிவு மேலும் குறையும்.
கடந்த காலங்களில் தண்ணீர் பற்றாக் குறையினால் பல கலாச்சாரங்கள் அழிந்துள்ளன.
இந்தியப் பெருங்கடலிலிருந்து மழைமேகங்கள் வரும்போது கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மழை கிடைக்கிறது, மேகங்கள் வெறுமையாகி கர்நாடகா ராயலசீமா, மற்றும் தமிழகத்திற்கு போதுமான மழை வருவதில்லை.
ஆனால் வெறுமையான மேகங்கள் வனங்களுக்கு அருகில் வரும்போது அவை மழை பொழிகின்றன. ஏனென்றால் வனத்தின் மேல் உள்ள காற்றில் அதிகப்படியான ஈரப்பதம் உள்ளது.
வெறுமையான மேகங்கள் இந்த ஈரப்பதத்தை காற்றில் இருந்து உறிஞ்சி மேகங்கள் ஈரப்பத்தால் நிரம்பும் போது மழை பொழிகிறது.
ஆனால் வனம் இல்லாத இடங்களில் மழை இல்லை. காற்று சூடாக இருக்கிறது. ஏனென்றால் காற்றில் ஈரப்பதம் இல்லை. மரங்கள் இல்லாத இடத்தில் மிகவும் சூடாக இருக்கிறது ஏனெனில் காற்றில் ஈரப்பதம் இல்லை.
அதாவது காட்டில் உள்ள மரங்கள் நீராவிப்போக்கு மூலமாக கூடுதல் ஈரப்பதத்தை காற்றில் கொடுக்கின்றன. அந்த கூடுதல் ஈரப்பதத்தை மேகங்கள் உறிஞ்சி மழையாக கொடுக்கின்றன. மழைவேண்டும் என்றால் மரம் வேண்டும்
40 வருடம் வயதான ஒரு மரம் மண்ணில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி 200 லிட்டர் தண்ணீரை நீராவியாக்குகிறது.
காற்றைக் ஈரப்பதத்தால் நிரப்ப புதிய காடுகளை உருவாக்க வேண்டும். பல்வேறு ரக மரங்களை நடவேண்டும். ஒரே வகை மரங்களை நடுவது காடு அல்ல. இது பல்லுயிர் பெருக்கத்தை அழித்துவிடும். எனவே நாம் 5 அடுக்கு மாத்ரி மூலம் பழத்தோட்டம் அமைக்கலாம்.
450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவாகியது. பூமி குளிர்ந்தபின் தண்ணீர் உருவாகியது. தற்போது பூமியில் 70 சதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. கடவுள் இயற்கையில் அபரிமிதமான வளங்களைக் கொடுத்துள்ளார்.
மண், நீர், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்கள், ஆனால் இந்த இயற்கை வளங்கள் அளவிட முடியாத எண்ணிக்கையில் இல்லை.
இந்த இயற்கை வளங்களை தேவையின்றி பயன்படுத்தி அழித்துவிட்டால் ஒரு நாள் நிச்சயம் இந்த இயற்கை வளங்கள் தீர்ந்து போகும்.
இந்த இயற்கை வளங்களை மனிதர்களால் தொழில்சாலையில் உருவாக்க முடியாது.
*இந்த வளங்களை அழித்துவிட்டால் எதிர்கால தலைமுறையான நமது குழந்தைகளுக்கு உணவுத் தேவையை எப்படி பூர்த்தி செய்வது?*.
பருவநிலை மாற்றத்தால் மழைபொழிவு குறைகிறது, வறட்சி மேலும் மேலும் மோசமாகி வருகிறது.
எதிர்காலத்தில் பாசனநீர் முழுவதையும் குடிநீராக மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்படும், விவசாயம் எப்படி வாழும்.
புவி வெப்பமடைதலால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது வெப்ப நிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, பருவ நிலை அதிவேகமாக மாறி வருகிறது.
பகல் வெப்பநிலை தற்பேது இருக்கும் நிலையைவிட 1.5 டிகிரிக்கும் மேல் அதிகரிக்கும் போது நம்மால் பயிர்களை சாகுபடி செய்ய முடியாது.
இந்திய பாராளுமன்றம் 2002 ல் ஒரு பல்லுயிர் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு அரசாங்கமும் கடமைப்பட்டுள்ளது.
நாட்டு மாட்டுக்களில் அனைத்து ரகங்களையும், பூச்சிகள் மற்றும் பறவைகள், விலங்குகள் என அனைத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது.
*ஏனென்றால் பல்லுயிர்களை நாம் காப்பாற்றினால் நிச்சயம் வருங்கால சந்ததியினரை காத்தவர்களாவோம்.*
*வரும் காலத்தில் நாட்டு மாடுகள் இல்லை என்றால் விவசாயம் இல்லை என்பது உண்மை.*
இதனால் கிராமங்களில் அனைத்து பாரம்பரியத்தையும் காப்போம்.
இயற்கை வளங்களை பாதுகாக்க அரசாங்கம் ஆர்வம் இருக்கலாம், அதனால் நாம் அரசாங்கம் செய்யும் வரை காத்திராமல் மக்கள் இயக்கமாக மாற்றுவோம்.
மண்ணில் 2.5 சதவீதம் ஆர்கானிக் கார்பன் இருக்கிறது. C:N விகிதம் 10:1 என்ற அளவில் பராமரிக்கப் பட்டால் நாம் அதிகபட்ட நுண்ணுயிர்களையும் பல்லுயிர்களையும் உருவாக்கும் போதுதான் மண் அதிகபட்ச விளைச்சல் கொடுக்கும்.
இந்த ஆர்கானிக் கார்பன் மண்ணில் மக்கு மூலம் சேர்கிறது. C:N விகிதத்தை ஊடுபயிர் மற்றும் மூடாக்கு மூலமும் பராமரிக்க முடியும்.
மண்ணில் பல வகை நுண்ணுயிர்கள் அதிக எண்ணிக்கையில் நிரம்பி இருப்பதை ஜீவாமிர்தம் கனஜீவாமிர்தம் சாத்தியமாக்குகிறது.
நாம் ஒரு கிராம் ஜீவாமிர்தத்தின் மூலம் மண்ணில் 500 கோடிக்கும் அதிகமான நுண்ணுயிர்களைக் கொடுக்கிறோம்.
பாரம்பரிய விவசாயம், இரசாயன விவசாயம் போன்ற அனைத்து விவசாய முறையும் மட்கை அழிக்கிறது. என்பதை நாம் கண்டோம்.
பாலேக்கர் விவசாயம்தான் மட்கு உருவாக்கி மண்ணில் சேர்க்கும். நாம் மண்ணின் உயிர்தன்மையையும் உற்பத்தி திறனையும் காக்கும் போது இயற்கை வளங்களை காக்கிறோம்.
பாலேக்கர் விவசாயம் 90 சதவீதம் தண்ணீரையும மின்சாரத்தையும் சேமிக்கும் அதோடு நீர் மாசடைவதையும் கட்டுப்படுத்துகிறோம். நாம் இரசாயன உரம், பூச்சிக் கொல்லி, கனஉலோகங்கள் கொண்டு நீரை மாசுபடுத்துவதில்லை.
கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமைக்குடில் வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்கும், பருவநிலை மாற்றத்திற்கும், சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும் காரணமாக வாயுக்களாகும்.
இரசாயன விவசாயமும், அங்கக விவசாயமும், சாண எருவை அடிப்பைடையாகக் கொண்ட பாரம்பரிய விவசாயமும் சுற்றுச்சூழலை பெரிய அளவில் மாசுபடுத்தி சுவாச கோளாறையும் ஏற்படுத்துகிறது.
நாம் பாலேக்கர் விவசாயத்தில் ஒரு கிராம் பசுமைக் குடில் வாயுவையும் வெளிவிடுவதில்லை, ஏன் என்றால் நாம் உரம், தொழுஉரம், இரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதில்லை.
இரசாயன விவசாயத்தில் பயிரின் கழிவுகள் எரிக்கப்படுகிறது, அங்கக விவசாயத்தில் பயின் கழிவுகள் எருவிலும் மண்புழு உரத்திலும் அழிக்கப்படுகிறது. நாம் பயிரின் கழிவுகளை எரிப்பதில்லை கழிவுகள் முழுவதையும் மூடாக்காக பயன்படுத்துகிறோம்.
உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் தாவரத்தின் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது. பறவைகளை, பூச்சிகளை, நுண்ணுயிர்களை அழிக்கின்றன.
பாலேக்கர் விவசாயம் விஷமில்லா உணவை கொடுக்கிறது, விஷமில்லா தீவனம் கொடுக்கிறது. சத்தான உணவுகளைக் கொடுக்கிறது. நாம் பல்லுயிர்களை பாதுகாக்கிறோம்.
ஒரு குழந்தை பூமியில் பிறக்கும் சமயத்தில் அக்குழந்தையில் கை மூடியிருக்கிறன. நாம் இறக்கும் போது நம் கைககள் திறந்திருக்கின்றன, கடவுள் குழந்தையை கைகள் முடியபடி அனுப்புகிறார் என்றால் கடவுள் அந்த கையில் ஏதோ கொடுத்துள்ளார் என்று அர்த்தம். பிறக்கும் சமையத்தில் அந்த குழந்தைக்கு இரண்டு கடமைகளை கொடுக்கிறார்.
பூமிக்கு சென்று சிறந்த சேவையை சுரண்டப் படுபவர்களுக்கும் வசதியானவர்களிடம் இருந்து ஒதுக்கப்படுவர்களுக்கும் செய், விவசாயிகளும் வேலையாட்களும் சுரண்டாப்ட்டு ஒதுக்கப்பட்டவர்கள் ஆவர்கள். இந்த இயக்கம் மூலம் நாம் விவசாயிகளை பாதுகாக்கிறோம்.
சுபாஷ் பாலக்கர் இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயத்தினால் எற்படும் மாசை தடுப்போம்.
சட்டங்களும் அரசு அமைப்புகளும் இயற்கை வளங்களை காப்பாற்றாது மக்கள் இயக்கமே இயற்கை வளங்களை காப்பாற்றும்.
பொது ஜனங்களுக்கு மாசுகளை கட்டுப்படுத்துவதில் பெரிய பங்கு உண்டு. அதாவது நாம் பன்படுதும் பொருட்களை பயன்படுத்தும் பட்டியலிட வேண்டும், குடும்பத்தினர் அனைவரும் கலந்து பேசி எது தேவை இல்லையோ அதை நிறுத்த வேண்டும்.
நாம் காலையில் எழுந்ததும் பிரஷ், பேஸ்ட் வாங்கும் போது நமது பணம் இந்தியாவிலிருந்து வெளியில் செல்கிறது, அப்படியானால் நாமே நமது பொருளாதாரத்தை சுரண்டுகிறோம்.
இவற்றை தயாரிக்க மூலப்பொருட்கள் இயற்கையில் இருந்து வருகிறது எனவே இயற்கையை சுரண்டுகிறோம். தொழில்சாலைகள் பேஸ்ட், பிரஸ் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கேடு செய்யும் வாயுக்களை வெளியிடுகின்றன.
வாய் கொப்பளிக்கும் போது தண்ணீர் மாசடைகிறது. எந்த விலங்கும் பேஸ்ட் பிரஷ் பயன்படுத்தவில்லை, நானும் முன்புபயன்படுத்தி வந்தேன் தற்போது 30 வருடமாக பேஸ்ட் பிரஷ் பயன்படுத்தவில்லை.
நான் தற்போது வெறும் பல்பொடி மட்டுமே பயன்படுத்துகிறன அதுவும் என் கிராம்தில் சுயஉதவி குழுவினர் தயாரிக்கும் பல்பொடிதான். நான் உங்களிடம் கேட்கிறேன் பேஸ்ட் பிரஷ் பயன்படுதுவதை நிறுத்துங்கள். அது தான் ஆன்மிகம்.
பூஜையும் ஆன்மீகம் வழிபாடும் ஆன்மிகம் இல்லை.
ஷேவிங் கிரீம் பயன்படுத்தாதீர்கள், காலையில் டீ குடிக்காதீர்கள், சோப்பு பயன்படுத்தாதீர்கள் இவைகளால் இந்தியா பணம் வெளிநாடுகளுக்கு போகிறது. சுற்றுச்சூழல பாதிக்கிறது.
பாலி எஸ்டர் துணிகளைப் பயன்படுத்தாதீர்கள், பருத்தி அணியுங்கள் இதனால் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்ப் கிடைக்கும்
இதற்கு மாற்றாக இயற்கையான பொருட்களை பயன்படுத்துங்கள். முயற்சி செய்தால் அது சாத்தியமே. உங்களால் இயன்ற இந்த சிறு செயலை இன்று முதலே தொடங்குங்கள்.
ஒரு 80 வயது கிழவர் ஒரு மாங்கன்றை நடுகிறார் என்றால் அது அவருக்காக அல்ல அடுத்த தலைமுறைக்காக,
நமது எதிர்காலத் தலைமுறை குறித்து நமக்கு அக்கறை வேண்டாமா, சிந்தியுங்கள் நண்பர்களே!
சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி