யூரியா ஏன் பயன் படுத்தக்கூடாது
யூரியா மண்ணில் சிதையும் போது அமோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது என்பது பலருக்கும் தெரியும் தானே. ஒரு டீஸ்பூன் யூரியா சாப்பிட்டால் அது மனிதனை கொன்றுவிடுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இந்த விஷத்தைத் தாங்குமா? உங்கள் நிலத்தி்ன் நுண்ணுயிர்களை அழித்துவிட்டால் நீங்கள் காசு கொடுத்து உரம் வாங்கித்தானே ஆகவேண்டும்.
ஆர்கானிக் உரம் உற்பத்தி செய்யப் பயன்படும் புழு (hesnio foetida) ஹெஸ்னியோ போடிடா மண்ணில் உள்ள கன உலோகங்களை கண்டறிய மட்டுமே பயன்படுத்தினார்கள், இந்த புழு கன உலோகங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்பதால் அந்த புழுவில் இந்த கன உலோகங்கள் சேர்கின்றன. இவை தரும் எச்சத்திலும் கன உலோகங்கள் உள்ளன, மண்ணில் சேர்ந்து நமது உணவுக்கும் வருகிறது.
மக்களும் விவசாயிகளும் இது வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும். நீங்கள் மாறத் தயாரா? நீங்கள் இரசாயன உரத்தை தவிர்க்கத் தயாரா?
மண்வளம் பெருக மண்ணில் நுண்ணுயிர்களையும். நாட்டு மண்புழுக்களையும் மண்ணில் அறிமுகப்படுத்துவது அவசியம். எதை பயன்படுத்தி இந்த இரண்டு விஷயங்களையும் மண்ணில் கொண்டுவருவது?
எனது வாழ்வில் இதை கவனித்தேன். ஒரு முறை மண்ணில் நாட்டு மாட்டு சாணம் இருந்தது. அந்த சாணத்தை விலக்கி பார்க்கும் போது அந்த சாணத்தில் அடியில் பல துவாரங்கள் இருந்தன. அந்த துவாரத்தை செய்தது யார்?
நான் 15 அடி ஆழம் வரை தோண்டினேன். அந்த துவாரத்தில் இருந்து இரண்டு பூச்சிகளைப் பார்த்தேன். ஒன்று சாணியை உருட்டும் சாணி வண்டு, மற்றொன்று நாட்டு மண்புழுக்க்ள். சாணம் மண்ணில் விழுந்தவுடன். அந்த வாசனையை உணர்ந்து நாட்டு மண்புழுக்கள் சாணத்தை நோக்கி வருகின்றன.
இதில் நான் கண்டறிந்தது நாட்டு மண்புழுக்களை பொறுக்க வேண்டும் என்றால், நாட்டு மாட்டு சாணம் வேண்டும் என்பது தெரிந்தது.
நமது நாட்டு மாட்டு சாணத்தில் 100 சதவீதம் நுண்ணுயிர்கள் உள்ளன. மற்ற பல விலங்குகளை பரிசோதித்தபின்னரே இந்த முடிவெடுத்தேன். அதாவது நாட்டு மாடு, காளை மாடு, எருமை, ஜெர்சி போன்றவற்றை பரிசோதித்தபின் இந்த முடிவெடுத்தேன்.
மேலும் எந்த அளவில் நாட்டு மாட்டு சாணத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள 1000, 900, 800, 700, 600, 500, 400, 300, 200, 100, 40, 20, 10 கிலோ என பல அளவுகளில் ஒரு ஏக்கருக்கு நாட்டு மாட்டு சாணத்தை பயன்படுத்தி பரிசோதனை செய்ததில் 10 கிலோ நாட்டு மாட்டு சாணம் ஒரு மாதத்திற்கு ஒரு ஏக்கருக்கு போதுமானதாக உள்ளது என்பதை கண்டறிந்தேன். 10 கிலோ சாணத்திலேயே நமக்கு போதுமான விளைச்சல் கிடைத்துவிட்டால் நாம் ஏன் 1000 கிலோ சாணம் பயன்படுத்த வேண்டும்.
விஞ்ஞானிகள் ஒரு தவறாக பதிவை உங்களிடம் விதைத்துள்ளார். உரங்கள் தாவரத்திற்கு உணவு என்று அவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் எந்த ஒரு உரமும் வேர்களுக்கு உணவு அளிப்பதில்லை.. அதனால் அவற்றை வெளியில் இருந்து போடுவது தேவையற்றது.
உங்களால் இதை நம்ப முடிகிறதா, நான் இதை விளக்குகிறேன். ஒரு தாவரத்தில் எடையில் 98.5 சதம் காற்றில் இருந்தும், நீரில் இருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் கிடைக்கிறது.
இதை நான் அறிவியல் பூர்வமாக நான் நிருபிக்க வேண்டும். உதாரணத்தற்கு 100 கிலோ எடையுள்ள பச்சையாக உள்ள தாவரத்தை வெட்டி எடுத்து அதை காயவைத்தால் அதன் எடை 22 கிலோ மட்டுமே இருக்கும். அப்படி என்றால் 78 சதவீதம் தண்ணீர் ஆகும்.
இந்த காய்ந்த கழிவுகளை எரித்தால் கரும்புகை வெளியேறும் மற்றும் நெருப்பு ஜுவாலைகள் எழும். கரும் புகை என்பது கார்பன் ஆகும். ஜுவாலை என்பது சூரிய சக்தியாகும். இது எரிந்த பின் கிடைக்கும் வெண்மையான சாம்பல் 1.5 கிலோ மட்டுமே இருக்கும். இந்த தனிமங்கள் மண்ணில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த 1.5 கிலோ வெள்ளை சாம்பலில் உள்ள நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ், கால்சியம், மெக்னீசியம், சல்பர் மற்றும் நுண் தனிமங்கள் மண்ணில் இருந்து எடுக்கப் பட்டவையாகும்.
மண் ஊட்ட சத்துக்களின் கடலாகும் இந்த ஆழத்தில் இருக்கும் ஊட்டசத்துக்கள் மேலே எடுத்துவரப்பட்டு மண்ணின் மேல் பரப்பில் சேர்க்கப்படுகிறது. இது பயிரின் எச்சங்களை மூடாக்காக போடுதால் சாத்தியமாகும். இது ஊட்டசத்துக்கள் மேலே வரும் மற்றோரு முறையாகும். மட்கின் மூலம் மீண்டும் தாவரத்திற்கே கிடைக்ககிறது.
இதன் மூலம் உண்மை புரிகிறதா? நிலை இப்படி இருக்கையில் உரம் கொடுப்பது சரியா? தவறா? அதனால் உரம் தேவையில்லை அல்லவா?!
யூரியா ஏன் பயன் படுத்தக்கூடாது சரி….ஏன் சாணத்தைப் போடசெல்கிறீர்கள்,
நல்லது அது உரம் அல்ல, மட்கும் அல்ல, இது நுண்ணுயிர்கள் வளரும் ஒரு வளர்ச்சி ஊடகம் மட்டுமே.
சரி…
நாட்டு மாட்டு சாணதை ஏன் ஊடகமாக பயன்படுத்துகிறோம்.
நாம் முன்பே கண்டதுபல் நாட்டு மாட்டு சாணத்தல் நுண்ணுயிர்களின் அளவு மிக அதிகமா உள்ளது. நான் குறைந்த சாணத்தை பயன்படுத்தி ஊடகத்தை தயாரித்து விடலாம். உதாரணமாக 200 மி.லி பாலில் 1 ஸ்பூன் தயிரை சேர்க்கிறோம். நாம் ஒரு அதுபோல் கோடிக் கணக்கில் நுண்ணுயிர் பெருக 10 கிலோ சாணம் போதுமானது.
சில விஞ்ஞானிகள் நுண்ணுயிர்களுக்கும் நாட்டு மண்புழுக்களும் ஊட்ட சத்து தேவையை பூர்த்தி செய்ய எந்த பங்கும் இல்லை என்கிறார்கள், இது தவறு. நுண்ணுயிர்கள் மட்கை உருவாக்கி ஊட்ட சத்துக்களை தாவரங்களுக்கு வழங்குகிறது நாட்டு மண்புழுக்கள் நீரையும் ஊட்ட சத்துக்களையும் தாவரங்களுக்கு கொடுக்கிறது. இரண்டுமே இலவசம் தான் என்பது சந்தேகம் இல்லை.
நாட்டு மாட்டு சாணத்தின் மூலம் ஒரு ஏக்கர் மண்ணில் 30 டிரில்லியன் நுணணுயிர்களை அறிமுகப் படுத்துகிறோம்.
ஆராய்ச்சிகளின் மூலம் நான் கண்டறிந்தது ஜெர்சி, எச்.எப் மற்றும் எருமை சாணம் நுண்ணுயிர் பெருகத்திற்கு பயனற்றது என்பதை கண்டறிந்தேன். இவற்றில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் இல்லை, ஜெர்சி, எச்.எப் வகைகள் ஒரு மாடே அல்ல, இது ஒரு அபாயகரமான பசு போன்ற விலங்கு.
எனவே நாட்டு மாட்டு சாணம் மிகவும் முக்கியமானது. நான் பத்து கிலோ நாட்டு மாட்டு சாணத்தை எடுத்து 200 லிட்டர் தண்ண்ர் 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து ஜீவாமிர்தம் தயாரித்து பயன்படுத்தும் போது நல்ல முடிவுகள் கிடைத்தது, ஆனால் மிகபெரிய விளைச்சல் கிடைக்கவில்லை.
விவசாயிகளையும், இளைய சமுதாயத்தை நம்இயக்கம் நோக்கி இழுப்பதற்கு நான் ஜீவாமிர்தத்தின் மூலப்பொருட்களை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன் அதற்கு ஒரு மாற்று வழி இருந்தது, மிக வேகமாக நுண்ணுயிர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அதாவது 30 லட்சம் கோடி நுணணுயிர்களை எண்ணில் அடங்கா கோடிகளாக பெருக்க விரும்பினோம்
இது ஒரு வழிமுறை மூலம் சாத்தியமாகும், அதாவது நொதிக்க வைக்கும் செயல்முறையில் இது சாத்தியமாகும். நொதித்தல் வேகத்தை அதிகரிக்க இனிப்பு அவசியம் என்பதை கண்டறிந்தேன். அதன்பின் நாட்டு சர்க்கரை பயன்படுத்த முடிவெடுத்தேன்.
பல்வேறு இனிப்புகளை பல அளவுகளில் பயன்படுத்திப் பார்த்தேன். வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கரும்புச்சாறு மற்றும் கரும்பை துண்டுகளாக வெட்டியும் பயன்படுத்திப் பார்த்தேன்.
தேன் மற்றும் இனிப்பு பழங்களின் பயன்படுத்திப் பார்த்தேன். கடைசியில் கரும்பில் இருந்து எடுக்கும் நாட்டுச் சர்க்கரையில் சிறந்த பலன் கிடைத்தது. வெள்ளைச் சர்கக்ரை பயன்படுத்த வேண்டாம்.
……..
வெள்ளைச் சர்க்கரை மெதுவாகக் கொல்லும் விஷம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து கொழுப்பை அதிகரிக்கிறது. குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கிறது மேலும் விஷப் பொருள்களை உடலில் உருவாக்குகிறது. மிக மோசமான மலச்சிக்கலையும், வயிற்றுப் புண்ளையும் உருவாக்குகிறது. எனவே வெள்ளை சர்க்கரையை எந்தத் தேவைக்கும் பயன்படுத்தாதீர்கள்.
ஜீவாமிர்தம் தயாரிக்க தேனை பயன்படுத்தும் போது மிகச்சிறந்த பலன் கிடைத்தது. நான் சோதனைக்காக தேனை சேர்த்து ஜீவாமிர்தம் தயாரித்த போது நொதித்தல் மிக வேகமாக நடந்தது. 20 நிடங்களிலேயே 30 லட்சம் கோடி நுண்ணுயிர்கள் 60 லட்சம் கோடியானது 48 மணி நேரத்தில் .எண்ணிலடங்கா நுண்ணுயிரிகள் பெருகியது. இது பரிசோதனைக்காக மட்டுமே செய்தேன். தேனைப் பயன்படுத்துவது எனது விருப்பம் இல்லை.
தேனை நாம் உணவாகப் பயன்படுத்துவதும் மகா பாவம் தேனீக்கள் தேனை உருவாக்குவது மனிதனுக்கு அல்ல அவற்றின் குட்டிகளுக்கு ஊட்டி வளர்க்கவே தேன் சேகரிக்கின்றன.
தேனி ஒரு நாளுக்கு தேன் தேடி மலர் தாவி 30 கி.மீ தொலைவுக்கு பயணம் செய்கிறது. ஒரு மலரில் 1800 முறை சுற்றிவந்து தேனை எடுக்கிறது, அந்த தேன், அவற்றின் உடலில் பதப்படுத்தபட்டு தேன் தயாராகிறது. தேனீக்கள் பத்து கிலோ தேனை உண்ணும் போது அதில் ஒரு கிலோ மெழுகு கிடைக்ககிறது.
இயற்கை தேனீக்களின் மனதில், தேனின் மேல் ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. ஏனெனில் மகரந்த சேர்க்கைக்கா இந்த ஈர்ப்பை உருவாக்கியுள்ளது, தேனீக்கள் தேனை சேகரிக்க மலருக்கு மலர் செல்லும போது தேனை சேரிகரிப்பதுடன் அதன் கால்களால் மகரந்த சேர்க்கையும் நடைபெறுகிறது.
நாம் தேனை உணவாக உண்பதை தவிர்க்கலாம், நாம் ஒரு தேக்கரண்டி தேன் உண்ணும் போது நாம் 150 தேனீக்களை அழிக்கிறோம் என்பதை அறிவீர்களா?
சரி நுண்ணுயிரிகளில் பெருக்கம் அதிகரிக்க சர்க்கரை மட்டும் போதுமா? கணக்கிலடங்கா நுண்ணுயிர்களுக்கு எப்படி ஊட்டம் அளிப்பது, அதற்கான சக்தியை எப்படி அளிப்பது. புரதம் இதற்கு சரியான தீர்வாக அமைந்தது. ஒரு கிராம் புரதத்தில் 4.5 கிலோ கலோரி உள்ளது. இது ஒரு அறிவியல் பூர்வமான உண்மை அதாவது பயறுவகைகள் அதிக அளவிலான புரதம் கொண்டவை. நான் பல அளவுகளில் பயறுவகை மாவுகளை பயன்படுத்தி பார்த்தபின் ஜீவாமிர்தத்தின் சூத்திரம் எனக்கு கிடைத்தது.
சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம்
04.02.2019 / afternoon session