Month: July 2017

இலவச இயற்கை விவசாய பயிற்சி

*உயிர் இயற்கை விவசாயிகள்* கூட்டமைப்பு நடத்தும் மண்டல அளவிலான இலவச இயற்கை விவசாய பயிற்சி

*நாள்* 22/07/2017(சனிக்கிழமை)

*இடம்*அவினாசி(அன்னூர் ரோடு செந்தூர் மஹால்)

*நேரம்* காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை

*பயிற்சியாளர்கள்*
1. *திரு.ஸ்ரீதரன்* அவர்கள்(பேராசிரியர் பூச்சியியல் துறை,வேளாண் பல்கலைக்கழகம் கோவை)

2. *திரு.நவநீதகிருஷ்ணன்* அவர்கள்(உயிராற்றல்(பயோடைனமிக்)வேளாண்மை)பயிற்சியாளர்.

3. *திரு. ஏகாம்பரம் அவர்கள்*(முன்னோடி இயற்கை விவசாய பயிற்சியாளர்)

இயற்கை விவசாய ஆர்வலர்கள்,இயற்கை விவசாயிகள்,இராசாயன விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தமிழகத்தையே விஷமில்லா விவசாய மாநிலமாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் தங்களிடமுள்ள அனைத்து வாட்ஸ்ஆப் குழுக்களிலும் மற்றும் முகநூல் பக்கங்களிலும் இச்செய்தியை பகிர்ந்துதவுங்கள்.

*முன்பதிவு அவசியம்*
தொடர்புக்கு
வரதராஜன்-90470686677
ரவிச்சந்திரன்-9842935035
திருஞானம் 9894366050

*குறிப்பு* மாடித்தோட்டம்,வீட்டுத்தோட்டம் மற்றும் விவசாய நிலமே இல்லாத நுகர்வோர்களும்கூட இந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.

உணவுச் சரித்திரம்

உணவுச் சரித்திரம் food

உணவால் ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கும் உணவுதானே உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்!

உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு. உயிரினம் தோன்றிய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது உணவின் வரலாறு. மனிதனுக்கும் முன்னதாக தோன்றியது உணவுகள். மனிதன் இங்கு பிறந்தபோதே, அவனுக்கான உணவுகள் இருந்தன.நாடோடியாகத் திரிந்த மனிதன், வேட்டையாடி உணவை உண்டான். நெருப்பைக் கண்டுபிடித்ததும், உணவை சமைத்துச் சாப்பிடும் முறையை தெரிந்து கொண்டான்.

Continue reading

மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல்

மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல்: நிறைந்த நுண்ணுயிரிகளுடன் அனைத்து சத்துகளுடன்.அனைத்து பயிர்களுக்கும் சிறப்பான வளர்ச்சி கொடுக்கக் கூடிய அருமையான கரைசல்.

Continue reading

நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்

*அறிவியல் அறிவோம்*

*நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்*

முதன் முதலில் விஞ்ஞான பூர்வமாக மைக்ரோஸ்கோப்புகளை தாமே அமைத்து அவைகளைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்களைக் கண்டறிந்தவர் *அன்டோனி வான் லேவென் ஹீக்*- (Antoine Van Leeuwenhoek) என்பவரே.
*இவரது (1632 – 1723) வாழ்க்கை காலம்.*

ஹாலந்து நாட்டை சார்ந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். தந்தையுடன் பள்ளிப்படிப்பும் போய்விட்டது. அப்பொழுது அவருக்கு வயது பதினாறு.வாணிபம் கற்றுக்கொண்டு நகரமன்ற வாயில் காப்பானாகப் பணியாற்றிய இவர் தமது ஓய்வு நேரங்களில் *கண்ணாடி வில்லைகளை இழைத்துச் செப்பமிடும் வேலையில் ஈடுபட்டு வந்தார்*. தான் செப்பனிட்ட கண்ணாடி வில்லைகளை இணைத்து நுண்ணுயிர்களை பன்மடங்கு பெரிதாக பார்த்தார். *இதுவே முதல் மைக்ரோஸ்கோப்* ஆகும். இதே போன்று 247 மைக்ராேஸ்கோப்புகளை அமைத்தார். ஒரு பொருளை 40- 270 மடங்கு பெரிதாக்கி காட்டின. இவைகளை மைக்ரோஸ்கோப் என்பதை விட லென்ஸ்கள் என்பதே சரியாகும்.

இவர் தாம் உருவாக்கிய மைக்ரோஸ் கோப்புகளைக் கொண்டு கண்ட கண்ட பொருட்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தார். இதனைக் கண்ட பலரும் பைத்தியகாரன் என்றார்கள். அப்படிக் கூறிய மக்களைப் பார்த்து வேலன் ஹீக் மனம் வருந்தி அறியாமையால் உள்ள அவர்களை மன்னிப்போம் என்றார்.
ஹீக் தான் எடுத்துக் கொண்ட பொருளை நூற்றுக்கணக்கான முறைகள் ஆராய்ந்து பார்த்த பின்னர் அவற்றை பதிவு செய்வது என முடிவுக்கு வந்தார்.

பலமுறை பரிசோதனை செய்து தாம் கண்ட உண்மைகளை தொகுத்து இங்கிலாந்தில் *முதலாம் சார்லஸ் மன்னரால் ஏற்படுத்தப்பட்டிருந்த ராயல் சொசைட்டி என்னும் விஞ்ஞான கழகத்திற்கு அனுப்பினார்.* என்னுடைய மைக்ராேஸ்கோப்புகள் மூலம் நான் மயிர்களையும், விதைகளையும், தேனீக்களின் கொடுக்குகளையும், ஈக்களின் மூளையையும் பல நுண்ணுயிர்களையும் உற்றுப்பார்த்து வருகிறேன் சான்றோர்களே எனவும் இதுவரை எந்த மனிதனும் கண்டிராதவைகளை நான் பார்கிறேன் எனவும் எழுதி அனுப்பினார். மேலும் தான் அனுப்பிய கடிதத்தில் தான் பார்த்த பாக்டீரியாக்களையும் வரைந்திருந்தார்.

ஆனாலும் அவரது அறிவுப் பசியால் பல ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார். தேங்கி நிற்கும் மழைநீர், பல்லின் அழுக்கு, பலவகை பூச்சிகள், தவளைகளின் குடல் என தனது ஆய்வை மேற்கொண்டார். சுத்தமான மழைநீரில் எத்தகைய உயிரும் இல்லை எனவும் அதனுடன் மிளகுப்பொடியை கலந்து நன்கு உறியதும் காற்றில் நான்கு நாட்கள் வைத்திருந்து நுண்ணுயிர்கள் பெருகுவதையும் கண்டறிந்து மகிழ்ந்தார். உடனே ராயல் சொசைட்டிக்கு ஒரு துளி மிளகு நீரில் பல லட்சம் நுண்ணுயிர்களைக் கண்டேன் என எழுதினார்.
*லேவென் ஹீக் தான் முதன் முதலில் பாக்டீரியாக்களை செயற்கை சூழ் நிலையில் சாேதனைச் சாலையில் வளர்க்கும் முறையை கண்டறிந்தவர். இத்தகைய ஆராய்சியின் விளைவாக இவரை *நுண்ணுயிர் இயலின் தந்தை* என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.

இவர் ஒருநாள் சிறிய மீனைப் பிடித்து அதன் வாலின் மீது மைக்ரோஸ்கோப்பை வைத்துப் பார்த்த போது மயிரிழை போன்ற இரத்தக் குழாய்களைக் கண்டார். அவைகளின் வழியே குருதி ஓடுவதைக் கண்டார். இதுவே *குருதி சுழற்சி ஓட்டம் பற்றிய அறிவை அறிவியல் அடிப்படையில் விளக்கியது*. மேலும் சூடான காஃபியைக் குடித்த பின் தமது பல்லில் உட்பகுதி அழுக்கை மைக்ராேஸ்கோப் மூலம் ஆராய்ந்தார். வெப்பமே பாக்டீரியாக்களை கொள்கின்றன என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்கினார். (நாம் இன்னும் காலையில் தரையை தண்ணிரில் வாசல் தெளித்து பாக்டீரியாக்களை வளர்கிறோம்.)

நுண்ணுயிர் அறிஞர் பலர் இருப்பினும் அனைவருள்ளும் மிகச் சிறப்பான சான்றோர் இவரே ஆவார். இவர் தமது ஆய்வை மிகச் சரியாகச் செய்தவர். ஆனாலும் இவர் ஏனையோருடன் ஒத்துழைக்காததால் லூயி பாஸ்டர் (1822 – 1895) வரும் வரை சுமார் 150 ஆண்டு காலம் வரை நுண்ணுயிர் இயல் வளர்ச்சி அடையவில்லை. ஹீக் தமது கருவிகளை குடும்ப உறுப்பினர்கள் கூடத் தொடாதவாறு பாதுகாத்து வைத்திருந்தார்.

நாம் தற்போது பயன் படுத்தும் எலெக்ட்ரான் மைக்ரோஸ் கோப்பிற்கும் லேவென் ஹீக் மைக்ரோஸ்கோப்பிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. லென்ஸ் மைக்ரோஸ்கோப் ஒரு பொருளை 2500 – 3000 மடங்கு அதிகப்படுத்திக்காட்டும். ஆனால் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் ஒரு பொருளை ) 200000 மடங்கு பெரிதாக்கிக் காட்டும். இத்தகைய மைக்ரோஸ்கோப்புகள் கண்டுபிடித்ததன் விளைவாகத் தான் அம்மை போன்ற கொடிய நோய்கள் ஒழிக்கப்பட்டன. அதுவரை பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை பற்றி அறியாத நாம் நம்மூரில் அம்மை நோய்க்கு மாரியம்மனுக்கு படையல் மற்றும் வேப்பிலை போட்டு தண்ணீர் ஊற்றி அபிசேகம் செய்து வந்தோம் என்பதே உண்மை.

எது எப்படியாகினும் லேவென் ஹீக் கண்டறிந்த மைக்ரோஸகோப் தான் நுண்ணுயிர் கண்டுபிடிப்பதில் முன்னோடி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

தனது தந்தையை இளம் வயதில் இழந்தாலும் சோர்ந்து போகாமல் தனது தன்னம்பிக்கையாலும் தளராத முயற்சியாலும் பகுத்தறிவாலும் முன்னேறி *மாபெரும் கண்டுபிடிப்பை உலகுக்குக் கொடுத்த லேவென் ஹீக்கை நாம் கொண்டாடுவதோடு நமது முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கையூட்டிக்கொள்ள இவர் போன்றே சிந்திப்போம்.*

தகவல்…வளர்ந்தது விஞ்ஞானம், வீழ்ந்தது மூட நம்பிக்கை எனும் நூலிலிருந்து….

க.வி.நல்லசிவன்
திருப்பூர் இயற்கை கழகம்.

கிட்னி பழுது அடைந்தால்

  • தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டுநாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள்,  கிடைக்கும்,ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய் இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் , அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா? … யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம்இந்து உப்பு என்றால் என்ன ?…. இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளதுஇந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்? Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை வாய் புண் ஆகியவை கேட்கும்அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை தவிர்த்து இந்து உப்பு சேருங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ——————– Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்ககடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுறோம், சந்தேக படமா சாப்பிடுங்க ,Thanks for group admin

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் fruits

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்

வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

Continue reading

Indian super foods

அனில் அம்பானி, கரீனா கபூர் உட்பட பல்வேறு பிரபலங்களுக்குப் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் *ருஜுதா திவேகர்* இந்தியாவின் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா உணவுமுறைகள் குறித்துப் பல புத்தங்களை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் உணவியல் தொடர்பான புத்தகங்களில் ருஜிதாவின் புத்தகங்கள் முக்கியமானவை. சமீபத்தில் இவர் எழுதியுள்ள  

* சூப்பர் ஃபுட்ஸ் (Indian super foods)* புத்தகத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரங்கில் வாசகர்களோடு கலந்துரையாடினார்.  ஆரோக்கியமாக வாழ்வதற்காக அவர் சொன்ன ஏழு விதிகள் இங்கே.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அரிசியைக் குறையுங்கள் என யாராவது சொன்னால் தயவுசெய்து காது கொடுத்துக் கேட்காதீர்கள். அரிசி, நமது பாரம்பரிய உணவு. அரிசிதான் இங்கே அதிகம் பயிரிடப்படுகிறது, *“அந்தந்த மண்ணில் விளையும் உணவுதான் அந்த மக்களுக்கு” என்பதே ஹெல்த்தி சீக்ரெட்.* எனவே, அரிசியைத் தவிர்க்காதீர்கள். அரிசி எந்த விதத்திலும் கெடுதி விளைவிக்காது. மாவுச்சத்து உள்ளது போலவே அமினோஅமிலங்களும் இதில் நிரம்பியுள்ளன. அரிசி உணவுகள்தான் செரிமானத்துக்கு ஏற்றவை. எனவே, இட்லியோ சாதமோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

நெய் நன்றாக ஊற்றிச் சாப்பிடுங்கள்.*

நெய்யின் கிளைசெமிக் எண் குறைவானது. இதனால், சர்க்கரை நோயாளிகள்கூட பயப்படாமல் நெய் ஊற்றிச் சாப்பிடலாம். நெய்யில் அதிகமான நல்ல கொழுப்பு உள்ளது. இது, இதயத்துக்கு நல்லது. எனவே, சாம்பார் சாதத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட நடுங்காதீர்கள்.

தேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கிறது, முந்திரி சாப்பிட்டால் வெயிட் போடும் என்பதை நம்பி பலர் இதனைத் தவிர்த்துவிடுகின்றனர் இது தவறு. தேங்காயும், முந்திரியும் நம் ஊரில் அதிகம் விளைபவை.

தேங்காய், முந்திரி இரண்டிலும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது;* கொலஸ்ட்ரால் இல்லை. நமது உடல் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் அத்தியாவசியம். நமது கல்லீரல் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்துகொள்கிறது. தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளது என்பது தவறான செய்தி.

பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவதைவிட நம்மூர் நிலக்கடலை, முந்திரியைச் சாப்பிடுங்கள்.

கரும்பு நமது ஊரில் அதிகம் விளையக்கூடியது. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டால், பல்லுக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது. நாட்டுவெல்லத்தைப் பனிக்காலம் மற்றும் மழைக் காலத்திலும் சாப்பிடுங்கள். சர்க்கரையைக் கோடை காலத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலர், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு பிரவுன் சாக்லேட், செயற்கை இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். இது தவறு. கரும்பில் இருந்து இயற்கையானமுறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையைச் சாப்பிடத் தயங்காதீர்கள். அளவான சர்க்கரையோடு காபியும், டீயும் தாராளமாக அருந்துங்கள்.

தைராய்டு பிரச்னை பலரை வாட்டி வதைக்கிறது. சிலர் எடையைக் குறைத்தால் தைராய்டு குறையும் என்பார்கள். ஆனால், எடையும் குறைக்க முடியாமல், தைராய்டையும் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள். இதற்கு எளிய தீர்வு உண்டு.

முதலில், நீங்கள் மின்னணு கேட்ஜெட்டுகள் பயன்படுத்துவதைக் குறையுங்கள்.

 குறைந்தபட்சம் இரவு படுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாவது டி.வி, செல்போன், லேப்டாப் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள்.

 நன்றாக உறங்குங்கள். மனஅழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்.

வாரம் 150 நிமிடங்கள் பிடித்த உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.

இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரம் முன்பே முடித்துவிடுங்கள். இதைச் செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் இருக்கும்.

சிறுதானியங்களில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அதற்காக எப்போதும் சிறுதானியம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறுதானியத்தில்தான் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. எனவே, சிறுதானியமும் ஒரு நல்ல உணவு. அவ்வப்போது அதனை எடுத்துக்கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்

பலர் என்னிடம் கேட்கும் கேள்வி, எப்படிச் சாப்பிடும் உணவு அளவைக் குறைப்பது என்பதுதான். நமது நாக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. குழந்தை, தேவைக்கு மீறி தாயிடம் இருந்து தாய்ப்பாலை எப்போதும் குடிக்காது. நமது வயிறு நிறைந்த பின் யாரவது சாதத்தை நம் வாய்க்குள் வைத்துத் திணித்தாலும் நம்மால் விழுங்க முடியாது; துப்பத்தான் முடியும்.

 ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம் ஒரு ஜாங்கிரி சுவையாக இருக்கிறது என்றால் நம்மால் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டுதான் சாப்பிட முடியும். மூன்றாவது ஜாங்கிரியைச் சாப்பிடும்போது முதல் ஜாங்கிரியைச் சாப்பிட்ட அதே சுவை இருக்காது. ஆசையின் காரணமாகச் சாப்பிடுவது வேறு, சுவைக்காகச் சாப்பிடும்போது சாப்பிடுவது வேறு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சுவைக்காகச் சாப்பிடுங்கள்.

 சாப்பிடும்போது வேறு எந்த வேலையயும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், உணவை ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுங்கள்.

 உங்களுக்கான உணவுத் தேவையை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் எனச் சொன்னால், நிச்சயம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிடலாமே என்றுதான் மனம் ஏங்கும். எனவே, உணவின் அளவும் சரி, ஆரோக்கியமும் சரி உங்கள் கையில்தான்.

 மகிழ்ச்சி

வாழ்த்துகள்.