Category: Agriculture News

சொர்க்க மரம்

சொர்க்க மரம் Simarouba glauca
சொர்க்க மரம்:
தாவரப் பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca)
குடும்பம்: சைமரூபேசியே

 

பரவல்:

மத்திய அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும். பல பயன்கள் கொண்ட இம்மரம் திறன்குறைந்த மண்களில் கூட நன்கு வளரும். விளைநிலம் மற்றும் தரிசு நிலங்களிலும் வளர்ப்பதற்கு ஏற்றதாகும்.

தேவையான சூழல்:
தட்பவெப்பநிலை:

கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 1000 மீ வரை வளரக்கூடியது. ஆண்டு சராசரி வெப்பநிலை 17-35 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆண்டு சராசரி மழையளவு 500-2200 மி.மீ ஆகும்.

மண் வகை:

நல்ல வடிகால் உள்ள கார அமிலத்தன்மை 5.5 – 8.0 வரை உள்ள அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. ஆயினுள் 1.0 மீ ஆழமுள்ள மண்வகை இதன் வளர்ச்சிக்கு சிறந்தது. ஆழம் குறைந்த பாறைகள் கொண்ட இடங்கள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

வளர்ச்சி நிலை:

இம் மரம் மூன்று வருடங்களில் பூத்து காய்க்கும் தன்மை வாயந்ததாகும். வருடத்தில் ஒரு முறை, டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் பூக்கும். 4-6 வருடத்தில் காய்க்கத் தொடங்கி மேலும் 4-5 வருடங்களில் நிலையான காய்ப்புத்தன்மை அடைந்துவிடும். கீழே விழும் காய்கள் (இளஞ்சிவப்பு வகைகளில் கரு ஊதா நிற காய்கள் மற்றும் பச்சை வகைகளில் வெளிர் பழுப்பு நிற காய்கள்) மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். இடத்தின் சூழல் மற்றும் தட்பவெப்ப நிலையினை கொண்டு காய்க்கும் பருவகாலம் மற்றும் வளர்ச்சி காலம் வேறுபடும். காய்காய்த்து பின் வளர்ச்சியடைந்து பழுப்பதற்கு 1-2 மாதங்கள் ஆகும். காயானது நீள்வட்ட வடிவத்தில், 2-2.5 செ.மீ நீளம் கொண்டு, மெல்லிய கடின மேல்தோலுடன், சாறு போன்ற சதைப்பகுதியுடன் இருக்கும்.

மரத்தின் வளர்ச்சி:

அசெய்டுனோ, சைமரூபா அல்லது சொர்க்க மரம் என்று பொதுவாக அழைக்கப்படும் இம்மரம் நடுத்தர அளவுடனும், பசுமை மாறா தன்மையுடனும் (7-15 மீ உயரம்), ஆணிவேர் மற்றும் நீள உருளை வடிவ தண்டுடன் இருக்கும். மத்திய அமெரிக்காவின் எல் சால்வடோர் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும்.

கால்நடைகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இம்மரத்தினை உண்காது என்பதால் இதற்கு தனிகவனம் தேவையில்லை (ஷ்யாம் சுந்தர் ஜோஷி மற்றும் குழு 1996).

பயன்கள்:

சைமரூபா மரத்தின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதன் விதைகளில் 50-65 சதவிகிதம் உண்ணக்கூடிய எண்ணெய் இருப்பதனால் “வனஸ்பதி” என்ற சமையல் எண்ணெய் தயாரிக்க உபயோகப்படுகின்றது.

1950ம் வருடம் முதல் எல்சால்வடோர் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இந்த எண்ணெய் உணவு பயன்பாட்டிற்காக மன்டியா வெஜிடல் “நைவ்” (Manteea Vegetal ‘Nieve’) என்ற பெயரில் தயாரிக்கப்படுகின்றது.

தொழிற்சாலைகளிலும், தரமான சோப்புகள், உயவுப் பொருள்கள், சாயம், மெழுகூட்டு, மருந்துப்பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இவ்வெண்ணெய் உபயோகப்படுத்தப்படுகின்றது. (ஷ்யாம்சுந்தர் ஜோஷி மற்றும் சாந்தா ஹையர்மத், 2000).

எண்ணெய் தயாரிப்பில் கிடைக்கும் புண்ணாக்கில் அதிக சதவிகிதம் புரதச்சத்து (64%) இருப்பதால் அவற்றில் உள்ள நச்சுப்பொருட்கள் நீக்கப்பட்டு கால்நடை தீவனமாகும் இயற்கை உரமாகவும் உபயோகப்படுத்துகின்றது.

காய்களின் உள்பகுதி அட்டை தயாரிப்பில் பயன்படுகின்றது. பழத்தின் 60 சதவிகிதம் பழக்கூழ் என்பதால் அதனில் 11 சதவிகிதம் சர்க்கரைச் சத்து உள்ளதாலும் பழச்சாறு மற்றும் நொதித்தல் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

இதன் இலை குப்பை மண் புழுக்களுக்கு சிறந்த உணவு என்பதால் நல்ல உரமாக பயன்படுகின்றது. இலை மற்றும் மரப்பட்டைகளில் ‘குவர்சின்’ என்ற வேதிப்பொருள் அமீபியாசிஸ், வயிற்றுப்போக்கு மற்றும் அலேரியா போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

இயற்கையாக வளர்த்தல்:

பறவைகள் மற்றும் குரங்குகள் இப்பழத்தினை உண்டு போடும் எச்சங்களின் மூலம் தானாகவே ஊன்றி இவ்விதைகள் முளைக்கும். ஆயினும் இயற்கையாக வளர்ச்சி இம்மரத்தில் குறைவே ஆகும்.

செயற்கையாக வளர்த்தல்; விதை முதிர்ச்சி மற்றும் விதை சேகரிப்பு:

பூத்தபின் 11-13 வாரங்களுக்கு பிறகு சைமபோ காய்கள் அதிகப்பட்ட எடையுடன், நன்கு வளர்ந்த உட்கரு மற்றும் கடின நார்போன்ற உள்பகுதியுடன் இருக்கும். இதுபோன்ற பழங்கள் மரத்திலிருந்து தானே விழுந்துவிடும். இந்நிலையில் உள்ளவை வினையியல் முதிர்ச்சி பெற்று அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்டவையாக கருதப்படுகின்றன. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஓர் ஆராய்ச்சியில் பூத்தபின் 13 வாரங்களுக்கு பிறகு காய்கள் ஊதா நிறம் அடைந்தவுடன் விதைகள் வினையியல் முதிர்ச்சி பெற்றவையாக கருதப்படுகின்றன.

காய்கள் பச்சை மஞ்சள் நிறத்திலிருந்து கரு ஊதா நிறம் மாறியவுடன் சேகரிக்கலாம். காய்கள் மரத்திலிருந்து பறிப்பதே சிறந்தது. ஏனெனில் கீழே விழுந்த பின்னர் மண் பூஞ்சாண்களின் தாக்குதல் ஏற்படுகின்றது. காய்களின் பூஞ்சாண்கள் விதைகளையும் தாக்கி சேதப்படுத்துகின்றன. காய்களின் சதைப்பகுதி மாவுச்சத்து நிறைந்துள்ளதால் அவை கீழே விழுந்த சில மணி நேரங்களிலேயே பூஞ்சாண் தாக்குதல் ஏற்படுகின்றது. மரங்களின் அடியில் ஒரு தார்பாலின் விரிப்பை விரித்து மரத்தினை உலுக்கியோ (அ) காய்களை உருவுவதோ (அ) கிளைகளை அடித்தோ காய்களை உதிரச்செய்து சேகரிப்பது சிறந்த முறையாகும்.

விதை பிழிந்தெடுத்தல்:

நல்ல தரமான விதைகளுக்கான, காய்களை வளர்ச்சியடையாத முதிர்ச்சி பெறாத சிதைந்த மற்றும் அழுகியவற்றை தரம்பிரிக்க வேண்டும். மேலும் காய்களின் நிறங்கள் கொண்டு ழுமுமையான பச்சை, பச்சை மஞ்சள் மற்றும் அடர் ஊதா போன்றவற்றையும் பிரிக்க வேண்டும். பச்சை நிற காய்கள் தரம் குன்றியவை என்பதால் அவற்றை நிராகரிக்க வேண்டும்.

காய்களை சேகரித்தவுடன் சுத்திகரிப்பு செய்யும் இடங்களுக்கு அவற்றை சாக்குப்பைகளில் அனுப்ப வேண்டும். அங்கு காய்களின் சதைக்பகுதியை கைகளினாலோ, கருவி மூலமோ உடனடியாக பிடிய வேண்டும். கைகளினால் ஒரு வாளியல் காய்களை நன்கு பிழிந்தெடுக்க வேண்டும். இதன் மேல் நீர் ஊற்றினால் காய்களின் தோல் பகுதி வாளியின் மேலே மிதங்கும். விதைகளில் ஒட்டியுள்ள சிறிதளவு சதையுடன் மூங்கில் வாளிக்குள் வைத்து ஓடும் நீரில் நன்கு அலச வேண்டும். சிறிய அளவிளான விதைகளையே பிழிந்து நன்கு அலச வேண்டும். வாளியின் மேல் நிரம்பி வழியும் வரையில் விதைகளை எடுக்க கூடாது. அதே போல் நீண்ட நேரம் நீரினில் ஊறவைக்க கூடாது.

விதை உலர்த்துதல்:

விதைகளை எடுத்தவுடன் உடனடியாக சிலமணி நேரம் நிழலில் உலர்த்தி பின்னர் வெயிலில் உலர்த்த வேண்டும். இதனால் விதைகளின் ஈரப்பதம் குறையும். விதையின் மேல்புர ஈரத்தினை நன்கு பிழிந்து, அலசி பின்னர் உலர்த்தி குறைக்க வேண்டும். சேமிப்பு அறை ஈரப்பதம் நிறைந்து அடைத்து வைக்கப்பட்டிருந்தால் காற்றாடி உபயோகிக்கவேண்டும். விதைகளை குவித்து வைக்காமல், ஒரே அடுக்கில் பரப்பி வைக்க வேண்டும். விதையின் முதல் ஈரப்பதம் 12-15 சதவிகிதம் ஆகும்.

சேமிப்பு மற்றும் வீரியத்தன்மை:

இவை மென்தோல் விதைகள் என்பதால் குறைந்த வெப்பநிலையில் சேமித்தால் நீண்ட வருடங்களுக்கு அதிக வீரியத்தன்மையுடன் சேமிக்கலாம். அறையின் வெப்பநிலையில் காகிதப்பை (அ) துணிப்பைகளில் சேமித்தல் 9-12 மாதங்கள் வீரியத்தன்மை மாறாமல் சேமிக்கலாம். புதிய விதைகளின் முளைப்புத்திறன் 70-80 சதவிகிதம் ஆகும். விதைகளினுள் சதைப்பகுதி இருப்பதால் அவற்றின் மெல்லிய தோல் போன்ற மேல் பகுதியை பிரித்து வெயிலில் எண்ணெய் பிழிந்தெடுக்கும் வரையில் சேமிக்க வேண்டும். இப்படி செய்வதில் தாமதம் ஏற்பட்டால் எண்ணெயின் தரம் குறைந்து காணப்படும். எண்ணெய் எடுக்கும் முன்னர் விதைகளை உடைக்க வேண்டும்.

முன் நேர்த்தி:

விதைத்தூக்கம் இல்லையென்பதால் முன்நேர்த்தி எதுவும் தேவையில்லை. ஆயினும் நீரில் 12 மணிநேரம் ஊறவைப்பது முளைப்புத்திறனை அதிகரிக்கும்.

விதை தரம் பிரித்தல்:

விதைகளை தூய்மைப்படுத்தி உலர்த்திய பின்னர் அவற்றின் தரத்தினை மேலும் மேம்படுத்துவதற்காக அவற்றை நிலைப்படுத்த வேண்டும். இதற்கு நிரம்பாத, முதிர்ச்சியற்ற, உடைந்த (அ) பூச்சிகள் தாங்கி சேதமடைந்த விதைகளை களைந்தெடுக்க வேண்டும். நிரம்பிய மற்றும் நிரம்பாத விதைகளை அவற்றின் ஒப்பு அடர்த்தி வேறுபாடுகளை கொண்டு நீர் மிதவை முறையில் பிரித்தெடுக்க வேண்டும்.

 

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி சாகுபடி
பலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில் இம்மூலிகையும் ஒன்று. வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் உள்ளது.

பூக்கள் வெண்மையாய் இருக்கும். காய்கள் கருமையாகவும், கரும்பச்சையாகவும் காணப்படும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களோடு இருக்கும். இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

ஈரோடு மற்றும் சேலம் போன்ற மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மஞ்சளில் முக்கிய களையாக மணத்தக்காளி விளங்குகிறது. விவசாயிகள் அதனை சரியான முறையில் காயவைத்து மூலிகை கம்பெனிகளுக்கு விற்பனை செய்யலாம்.

இம்மூலிகையானது வாய் புண், குடல் புண் மற்றும் கல்லீரல் வீக்கத்தைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது.

மணத்தக்காளி கீரை சாகுபடி முறைகள்:

விதைகள் மூலமே இது உற்பத்தி செய்யப் படுகிறது.
எல்லா வகை மண்ணிலும் வளரும். பழங்கள் காயவைக்கப்பட்டு விதைகள் சேகரித்து சாம்பலுடன் கலந்து படுக்கைகள் அமைத்து விதை தூவப்பட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படுகிறது.
தொழு உரம் இடுவது மிகவும் அவசியமாகும்.
6 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் கன்றுகளை பிரித்து வயலில் நடலாம்.
தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். கன்றுகள் 30 செ.மீ. து 45 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். நட்ட செடிகள் மூன்று மாத இடைவெளியில் 120 செ.மீ. வரை வளரும்.
இதனுடைய மொத்த சாகுபடி காலம் 120 நாட்கள் மட்டுமே.

அறுவடை:

செடிகள் வேருடன் பறிக்கப்பட்டு, வேர் பாகம் தவிர்த்து மேல் பகுதிகளான இலை, தண்டு முதலியன துண்டு துண்டாக வெட்டி காய வைக்க வேண்டும்.
காய வைப்பதற்கு முன் பழங்களை பறித்து விடுவதன் மூலம் விரைவாக காயவும் மற்றும் பூசானம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
மூன்று நாட்கள் வரை நன்கு காய்ந்தபின் சாக்கு பைகளில் நிரப்ப வேண்டும்.
காய்ந்த செடியில் ஈரப்பதம் 8%க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிமென்ட் களம் மற்றும் தார்பாலின் கொண்டு காயவைப்பதன் மூலம் மற்ற தாவரங்கள், மண், கல் ஆகியவை கலந்துவிடாமல் தவிர்க்க முடியும்.

மகசூல் :

ஒரு ஏக்கருக்கு 1000-1500 கிலோ வரை காய்ந்த மகசூலை எதிர்பார்க்கலாம்.
தற்போது ஒரு டன் ரூபாய் 30,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

சந்தைப்படுத்துதல்:

இன்று மருந்து கம்பெனிகளுக்கு இதனுடைய தேவை அதிகமாக உள்ளது.
பெங்களூருவில் உள்ள நேச்சுரல் ரெமடிஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வதுடன் ஒப்பந்த சாகுபடியையும் ஊக்குவிக்கின்றன.
கம்பெனிகளுக்கு அனுப்பும்போது பயிரிட்டதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். சான்றிதழை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்தும் பெறலாம்.

நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு

நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு

கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கால்நடை வளர்ப்பு மூலமாகத்தான் ஓரளவு வருமானம் பார்த்து வருகிறார்கள் விவசாயிகள். அதிலும் ஆடு மாடுகளுக்குக்கூட தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்ட சூழ்நிலையில், நாட்டுக்கோழி வளர்த்து வந்த விவசாயிகள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டனர். இப்படி வறட்சிக் காலத்திலும் கைகொடுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். பிராய்லர் கோழிகளைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தீங்கு நேரும் என நம்பப்படுகிறது. அதனால், நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பிருக்கிறது.

Continue reading

மானியத்துடன் பால்பண்ணை கடன்

மானியத்துடன் பால்பண்ணை கடன்

மானியத்துடன் பால்பண்ணை கடன் திட்டம் பற்றிய விபரம் : இந்த திட்டமானது மாட்டு பண்ணை வைக்க நபார்டு (Nabard) வங்கியின் மூலம் கடன் வழங்குவதாகும்.

💰 இந்த திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க 6 லட்சம் வரை கடன் பெறலாம்.

யாரெல்லாம் கடன் பெறலாம்…?

💰 விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள்.

💰 ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

💰 ஆனால் அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேல் தள்ளி இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் கடன் பெறலாம்.

நபார்டு வழங்கும் கடன் திட்டங்கள் :

💰 இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25% மானியம் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம்.

💰 சிறிய மாட்டு பண்ணைகள் அமைக்க கடன் பெற்ற பின் (Back Ended Subsidy) வழங்கப்படும்.

💰 கன்று குட்டிகள் வளர்க்கும் திட்டத்தில் 20 கன்று குட்டிகள் வரை வாங்கலாம். இதற்கு ரூ.5.30 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 மண்புழு உரம் தயாரிக்கும் கடன் திட்டத்தில் ரூ.22,000 வரை கடன் பெறலாம்.

💰 பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டும் இயந்திரம் வாங்கும் கடன் திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 பால் குளிரூட்டி அதனை எடுத்து எடுத்து செல்லும் வாகனம் வாங்க ரூ.26.50 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 பால் குளிரூட்டும் பதனக் கிடங்கு அமைக்க ரூ.33 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 தனியார் கால்நடை மருத்துவமனை அமைக்க கடன் பெறலாம். இதில் நடமாடும் கிளினிக் அமைக்க ரூ.2.60 லட்சமும், நிலையான கிளினிக் அமைக்க ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

💰 பால் விற்பனை நிலையம் அமைத்து பால் பொருட்களை விற்பனை செய்ய ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம்.

பயனாளியின் பங்கு :

💰 ரூபாய் 1 லட்சம் வரை கடன் பெறம் பயனாளிகள் பங்கு தொகை எதுவும் கட்டத் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட கடனுக்கு 10மூ பங்குத் தொகையாக தர வேண்டும்.

கடன் வழங்கும் வங்கிகள் :

🏠 வணிக வங்கிகள்

🏠 கிராம மற்றும் நகர்ப்புற வங்கிகள்

🏠 மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ மாநில வேளாண் கூட்டுறவு வங்கிகள்

🏠 நபார்டு வங்கியில் மறுசுழற்சி நிதி பெறும் நிதி நிறுவனங்கள்

🏠 நபார்டு வங்கியில் கடன் பெறும் திட்டங்களுக்கே இது பொருந்தும்.

விண்ணப்பிக்கும் காலம் :

🕛 2017 – 18-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகள் மூலமாக நபார்டு வங்கிக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணபிக்க வேண்டும்.

🕛 தகுதியான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நபார்டு வங்கி கடன் வழங்கும்.

🕛 தொழில்முனைவோர் தங்களின் திட்ட அறிக்கைகளை வங்கியில் சமர்பிக்க வேண்டும்.

🕛 வங்கிகள் அதனை பரிசீலனை செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் முதல் தவணை பணம் கொடுக்கப்பட்ட பின் வங்கிகள் நபார்டு வங்கியை அணுகி மானியத்தினைப் பெற்று கொள்ளலாம்.

🕛 இவை அனைத்தும் அந்த பகுதியில் உள்ள நபார்டு கிளை அலுவலகத்தில் இரண்டு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

🕛 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.