Category: Social Media

பாரம்பரியக் கட்டடக்கலை

பாரம்பரியக் கட்டடக்கலை கட்டிடக்கலை

வீடு கட்டுவதற்கான செலவில் 60%ற்கும் அதிகமான பங்கை இம்மூலப்பொருட்களே எடுப்பதால், குறைந்த செலவு வீடுகளைக் கட்டும்போது இம்மூலப் பொருட்களைத் தகுந்த முறையில், குறைத்த செலவில் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டியதன் தேவை தவிர்க்க முடியாததே. வீட்டிற்கான மூலப்பொருட் செலவுகளை எவ்விதம் குறைக்கலாம்? இதற்கான விடையின் ஒரு பகுதியினைப் பாரம்பரியக் கட்டடக்கலை (Traditional Architecture) எமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

Continue reading

மக்களை முட்டாளாகவே வைத்து கொள்ள நினைக்கும் மீடியாக்கள் உண்மை முகம்

ஆமாம் டிஎம்சி..டிஎம்சி என்கிறார்களே அப்படியானால் அது எம்மாம் அளவு தண்ணீர் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது தௌஸன் மில்லியன் கியூபிக் ஃபீட்.. அதைத்தான் சுருக்கி டிஎம்சி என்கிறார்கள். தெளிவாக புரியும்படி சொன்னால் 100 கோடி கன அடி நீர்..

ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2830 கோடி லிட்டர் அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம். நமது டாஸ்மாக்கின் ஒரு வருட கலெக்ஷன்.

இதே ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றால் 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை தேற்றிவிடுவான். ஒரு டிஎம்சியை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். இவ்வளவு தண்ணீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் அடிக்க சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். இப்போது புரிகிறதா ஒரு டிஎம்சி தண்ணீர் என்றால் எவ்வளவு என்று?

Continue reading

கட்டடங்களும் தொழில் மயப்படுத்தலும்

கட்டடங்களும் தொழில் மயப்படுத்தலும்

இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை.

இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது குறைந்த செலவிலும் கட்ட வேண்டும்.

இதன் காரணமாகக் ‘குறைந்த செலவு வீடுகளின்’ (Low Cost Housing) தேவை வளரும் நாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளரும், அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன.

Continue reading

சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க

சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க

சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க..

#வீடு_கட்டுமானம்: #சில_உபயோகமான_தகவல்:

ஒரு கன மீட்டர்(cubic meter)9″ கனம் கொண்ட செங்கல்சுவர் கட்ட 450 செங்கற்கள் தேவை. சிமென்ட் 1.5 மூட்டை தேவை!

Continue reading

மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல்

மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல்
மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல் – thatch roofing

 

100 சதம் இயற்கையான கூரை அமைப்பு எனில் அது பனை ஓலை,தென்னை ஓலை,கரும்பு சோகை மற்றும் சில புல் வகைகள் ஆகியவற்றை கொண்டு கூரை அமைக்கும் முறை ஆகும்.

இதில் எது அருகில் கிடைத்ததோ அதை வைத்து அன்று கூரை அமைத்தனர்.

இதில் மிக முக்கியமானது மஞ்சம் புல்.இவற்றில் ஒரு விதமான எண்ணை தன்மை இருப்பதால் மிகவும் பராமரிப்பு குறைவானதும் அதிக நாட்கள் உழைக்க கூடியதும் இந்த மஞ்சம் புல் கூரை.

மற்றும் இந்த புல்லில் பட்டு வரும் காற்று உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மற்றும் கடுமையான வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியை கொடுக்க கூடியது.

இந்த மஞ்சம் புல் கூரையை மூங்கிளை கொண்டு நண்பர் Amutham Devaஅவர்கள் தமிழகமெங்கும் அமைத்து தருகிறார்.

தேவைபடுபவர்கள் தொடர்பு கொள்ளவும்….

கருங்கல் கட்டிடங்களின் நன்மைகள்

கருங்கல் கட்டிடங்களின் நன்மைகள்

கொளுத்தும் கோடை வெய்யிலிலும் இதமான குளிர்ச்சியைத் தரக்கூடியவை கருங்கல் கட்டிடங்கள். அதனால்தான் பண்டைய தமிழர்கள், கோயில்களையும், கோட்டைகளையும் கருகங்கற்களால் கட்டி கட்டிடக் கலைக்கு உதாரணமாக்கினர். நீண்ட ஆயுள், நீடித்த உறுதி, பாதுகாப்பு, சுற்றுச் சூழல் கேடின்மை, இதமான குளிர்ச்சி எனக் கருங்கல் கட்டிடங்கள் தரும் பலனை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்றைய காலகட்டத்தில் இத்தகையை சிறப்பு வாய்ந்த கருங்கல் கட்டிடம் ஒன்றை எழுப்பி, அதில் வசிப்பதென்பது அவ்வளவு எளிதில் கைகூடும் விஷயமல்ல.

Continue reading

அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்

அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்
அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்:

கலை நயம் மிகுந்த சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது.

 

இன்று ஒரு முன்னாள் அமைச்சருடைய பண்ணை வீட்டை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததது.விட்டின் அளவு ஏறக்குறைய 1௦௦௦௦ சதுர அடி இருக்கும். அமைச்சர் பெயர் வேண்டாம்.
இந்த வீடு கடந்த 5 வருடங்களாக கட்டப்பட்டு வருகிறது. சரி வீட்ட விடுங்க…

இதனுடைய சுற்று சுவர் பற்றிதான் நாம் இப்போ பேச போகிறோம். அருமையான சுற்று சுவர். வீட்டை விட எனக்கு சுற்றுசுவர் மிக அழகாக தெரிந்தது. கலை நயம் மிகுந்ததாக இருந்தது.

நல்லதை வீட்டுக்கு வெளியவும் கெட்டதை வீட்டுக்கு உள்ளேயும் வைப்பது நமக்கு ஒன்னும் புதிது இல்லையே..அதுல மினிஸ்டர் என்ன சாதாரண மக்கள் எல்லாமே இந்த விசயத்துல ஒண்ணுதான்.

சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது.ஏறக்குறைய 3௦௦ M சுற்றளவு வரும்.
கடந்த ஒரு வருடமாக கட்டட்டு வருகிதாம்.


பார்ப்பதற்கு க்ரானைட் ஒட்டப்பட்டது போலவே அழகாக தெரிகிறது. நாமும் இதை மண்ணை கொண்டே கட்டி எங்காவது பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. கல் வேலை செய்து கொண்டிருத்த மேஸ்திரியை பாராட்டி தொலைபேசி எண்ணை வாங்கி வந்தேன். இது போல கல் வேலை செய்பவர்கள் அழிந்து விட கூடாது. இவர்களை போன்றோருக்காகவாவது வீடு கட்டுபவர்கள் கருங்கல்லை பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை…

இந்த வீட்டை முழுவதும் கட்டி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டே வீடு திரும்பினேன்…

நான் ரசித்ததை என்னுடைய சோனி புகைப்பட கருவி வழியாக உங்களுக்கும்…

நன்றி…..ஹரி