கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள்

கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள்
கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள்

Diseases of Country Chickens நாட்டு கோழி வளர்ப்பில் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்களை பற்றியும் நோய்கள் எவ்வாறு வருகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பேன்கள் தொல்லை தந்தால்
கோழி தனது முட்டைகளை குஞ்சு பொறிக்க அடையில் உள்ளது.
அதன் மீதும், முட்டை மீதும் அதிகம் பேன்கள் உள்ளது. எப்படி இதனை சரி செய்வது.

பேன் வராமல் தடுக்க

பொதுவான 2மாத இடைவெளியில் கோழிகளை வசம்பு குச்சிகளை முதல் நாள் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் கோழிகள் மேல் நனைத்துவிடணும் அதாவது ஸ்பிரே கொடுக்கணும்.

அல்லது பூண்டு அரைத்து தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரில் கோழிகளை முக்கி எடுத்துவிட்டாலே போதும்,
பூண்டு கோழிகளுக்கு ஒரு சர்வலோக நிவாரணி,சளி,பேன் போன்றவைகளுக்கு,

தீவனம் சரியாக கொடுத்து கோழி அடையும் இடம் சுத்தமாக பராமரித்தால் போதும் பேன் தொல்லை வராது.

அடை கோழியில் பேன்

அடை கோழியில் பேன் வர முக்கிய காரணம் என்னவென்றால்,தினம் கோழி அடையில் இருந்து எழுந்து வெளியே தீனி எடுக்கவும்,மண்ணிலோ அடுப்பு சாம்பலிலோ புரண்டு செல்லாததே காரணம்,

நாம் அதனை கவனித்து பார்த்தால் தெரியும். வெளியே போகாத கோழியை தினம் அடையில் இருந்து வெளியே எடுத்துவிடணும்,

முட்டைகள் மீது பேன்

முட்டைகள் மீது பேன் இருக்க காரணம், அடையில் இருந்து வெளியே செல்லாத போது கோழி அதே அடையில் எச்சங்கள் இடும் அதனால் அதிலிருந்து பேன் உருவாகிவிடும்,அப்படி ஏற்பட்டால் அடையில் இருக்கும் சட்டி/கூடை,மணலை மாற்றி புதியதாக வைக்கலாம் அல்லது எருக்க இலைகளை சுற்றியும் பரப்பிவைத்தால் அந்த இலையின் மீது இருக்கும் பால் போன்ற தன்மையில் ஒட்டிக்கொள்ளும்,
தினம் இலையை மாற்ற வேண்டும்.

கெமிக்கல் மருந்து பூடெக்ஸ்,இதனை அதன் பாட்டில்கள் மீது எழுதியிருக்கும் பரிந்துரையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாட்டு கோழி வளர்ப்பில் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்களை பற்றியும் நோய்கள் எவ்வாறு வருகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

நாட்டு கோழிகளுக்கு நோய் வருமுன் பாதுகாப்பது எப்படி 

நாட்டு கோழி வளர்ப்பில் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு நோய் வந்த பின் மருத்துவம் செய்வதை விட நோய்கள் வரும் முன்னரே பாது காப்போம் .

சிறந்த முறையில் பண்ணையை பாரமரித்தாலே நோய் வருவது குறையும்.

கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள்.

# வெள்ளை கழிச்சல்.
# சளி மற்றும் சுவாசக் கோளாறு.
# அம்மை நோய்
# கோழி காய்ச்சல்
# சீரண கோளாறு
# கோழிப்பேன்கள்

 

வெள்ளை கழிச்சல், ரத்த கழிச்சல், அம்மை, சளி கோழிகளுக்கு வராமல் இருக்க:

செம்முள்ளி இலை – ஒன்று
நிலவேம்பு இலை – ஒன்று

இரண்டு இலைகளையும் சேர்த்து அரைத்து குடிக்கும் தண்ணீரில் கலந்து 10 நாளுக்கு ஒரு முறை கொடுத்தால் எந்த நோயும் வருவதில்லைங்க.

மூலிகை சாற்றை தருவதால் கோழிகளுக்கு வரும் வெள்ளை கழிச்சல், ரத்த கழிச்சல்,அம்மை, சளி போன்ற நோய்கள் வருவதில்லங்க. வயிற்றில்லுள்ள புழுக்கள் வெளியேற்ற உதவும்ங்க.இது 100 % சோதித்து பார்த்த ஒன்றுங்க.

வெள்ளை கழிச்சல் (அ) மற்ற நோய்கள் வந்தால்…….

அக்கோழிகளை தனியாக அடைத்து மூலிகை சாற்றை ink Piller கொண்டு காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை தர….. முதல் நாள் உணவு எடுக்காது, இரண்டாம் நாள் உணவு எடுக்கும், மூன்றாம் நாள் சகஜ நிலைக்கு வரும், நான்காம் நாள் மேச்சலுக்கு விடலாம்ங்க. 100% குணமாகும் சோதித்து பாருங்க.

கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள் diseases of country chickens

கோழி வளர்ப்பில் நோய்கள் வருவதற்கான 8 காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

🐥 பண்ணையில் கோழிகளுக்கு கொடுக்கும் தண்ணீரில் அதிக கவனம் தேவை. ஏன் என்றால் தண்ணீர் மூலம் தான் அதிக நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. கோழிக் குஞ்சுகளுக்கு ஒரு மாதம் வரை தண்ணீரையே கொடுக்க வேண்டும். (கொதிக்க வைத்து ஆறிய பின் கோழிக் குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும்.)

🐥 சிறிய அளவில் கோழி வளர்ப்பவர்கள் என்றால் எச்சங்களை தினமும் அப்புறப்படுத்த வேண்டும் .

🐥 தீவனத்தில் கவனம் செலுத்த வேண்டும் ஏன் என்றால் மழை மற்றும் பனி காலங்களில் தீவனத்தில் பூஞ்சைகள் வர வாய்ப்பு உள்ளது. பூஞ்சைகள் உள்ள தீவனத்தை கோழிக் குஞ்சுகள் மற்றும் கோழிகளுக்கு கொடுக்கும் போது சீரண கோளாறு ஏற்படும்.

🐥 கோழிகளுக்கு போதிய அளவு இடவசதி இருக்க வேண்டும். குறைந்த இடத்தில் அதிக அளவில் கோழிகளை வளர்க்க கூடாது.

🐥 கோழி குஞ்சுகளை வயதிற்கு ஏற்ப தனித்தனியாக அடைவைத்து வளர்க்க வேண்டும் . ஏன் என்றால் அனைத்து வயது கோழி குஞ்சுகளையும் ஒன்றாக வளர்க்கும் போது ஒன்றோடு  ஒன்று கொத்தி கொள்ளும். மேலும் தீவனம் அளிக்கும் போது வயது முதிர்ந்த கோழி குஞ்சுகள் தீவனத்தை விரைவாக சாப்பிட்டு விடும் இளம் வயது கோழி குஞ்சுகளுக்கு தீவனம் கிடைக்காமல் போகும்.

🐥பண்ணையில் சேவல்களை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும் ஏன் என்றால் மரபு வழி கோளறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

🐥 கோழிக் குஞ்சுகள் மற்றும் கோழிகளுக்கு சரியான முறையில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் .

🐥 மேலும் ஆங்கில மருந்துகள் கொடுப்பது என்றால் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும் . அல்லது ஒரு முன் அனுபவம் உள்ள நபர்களின் மூலம் மருந்துகளை கொடுக்க வேண்டும் ஏன் என்றால் ஆங்கில மருந்துகள் ஒரு துளி மருந்துகள் அதிகமானாலும் கோழிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

🐥 இது போன்ற தகவல்களை முறையாக பின் பற்றினால் பண்ணயை நோய்கள் வராமல் சிறப்பாகவும் இலாப நோக்குடன் நடத்தலாம். என கூறி கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

நன்றி

அசோலா சதீஷ்குமார் திருவண்ணாமலை.

1.1.2018

2 Responses to “கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *