கற்பூர கரைசல்

கற்பூர கரைசல் தயாரிக்கும் முறை:

கோமியம் 1.750 லிட்டர்
வேப்ப எண்ணைய் 500 மிலி
கிழிஞ்சல் சுண்ணாம்பு 100 கிராம்
மஞ்சள் தூள் 100 கிராம்
நாட்டு மருந்து கடையில். கிடைக்கும் ரசயனம் இல்லாமல் கிடைக்கும் கற்பூரம் 30 கிராம்
நீலகிரி தைலம் 50 மிலி
சீகைக்காய் பொடி 50 கிராம்*

*பயன்படுத்தும் முறை சீகைக்காய் பொடியை சிறிது தண்ணீர் விட்டு கலந்து வேப்ப எண்ணைய் அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதன் மூலம் எண்ணைய் படலம் இல்லாமல் நீருடன் கலந்துவிடும் கற்பூரம் நீலகிரி தைலம் இரண்டையும் சேர்த்து கலந்தால் கற்பூரம் கரைந்து விடும் இல்லை எனில் கற்பூரம் கரையாது இக்கலவையை சேர்த்து கோமியம் மஞ்சள் தூள் சுண்ணாம்பு தூள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்

கற்பூரகரைசல் தயார் தெளிப்பான் மூலம் 1 டேங் 100 மிலி போதுமானது.

இரண்டு முறை ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதுமானது.

Powered by BetterDocs

Proudly powered by WordPress