மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம்
இடு பொருட்கள் விலை கொடுத்து வாங்காமல் நாம் நமது கால்நடைகளின் கழிவுகளில் இருந்து இடுபொருட்களை தயாரித்து பயிர்களுக்கு கொடுத்து வருவதே சிறந்தது.
கால்நடை கழிவுகள் நுண்ணுயிரிகளை பெருக்கம் செய்வது இல்லை.
நுண்ணுயிரிகள் அதனுள் அடங்கியுள்ளன.
ஒரு நாட்டு மாட்டின் குடலமைப்பு அவ்வளவு ஆச்சரியமிக்க செயல்திறன் கொண்டது.
இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
செரிமானம் ஆன உணவு அந்த குடல் பகுதிகளை கடந்து வரும்போது அவ்வளவு நுண்ணுயிரிகளை ஏந்தி வரும் ஆற்றல் கொண்டது.
சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்.
அவ்வாறு வெளியேறிய கழிவுகளில் இருக்கும் நுண்ணுயிரிகளை பெருக்கம் செய்ய நாம் பயன்படுத்தும் யுக்திகள் தான் அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா போன்ற செய்முறைகள்.
ஒவ்வொரு செய்முறையும் தனி தன்மை வாய்ந்தவை.
ஒவ்வொன்றிலும் ஒரு வகையான நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைவதுண்டு.
அதனால் தான் பயிரின் வளர்ச்சி பகுதி ஒவ்வொரு நிலையிலும் வெவேறு செய்முறையை கடைபிடித்து அவற்றை பயன்படுத்துவது.
அதனால் கால்நடை கழிவுகளை சரியாக பயணப்படுத்தி தினம் நீரில் கலந்து பாசனம் செய்து வந்தால் நாம் வெற்றி அடையலாம்.
அதை விடுத்து இயற்கை விவசாயம் என்று நாம் மீண்டும் புட்டியில் அடைக்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தி மேலும் விவசாயி கடனாலி ஆகிவிட கூடாது.
ஒவ்வொரு விவசாயியும் அவரது பண்ணையில் சிறிய அளவில் எளிமையான முறையில் மண்புழு தயாரிப்பில் ஈடுபட வேண்டும்
மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம்
அதற்கடுத்தபடியாக கோமியம் மற்றும் சாணத்தை சேகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.