பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது

பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது
Agriwiki.in- Learn Share Collaborate

தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள் !!

1. நெல் அறுவடைக்குப் பின் கரும்பு பயிரிட பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது?

நன்செய் நிலங்களில் மண்ணினை உழவு செய்து நல்ல மென்மை தன்மையைக்கொண்டு வர இயலாது.

நெல் அறுவடை செய்தபின் நிலத்தை நன்றாக உழுது 40 செ.மீ ஆழமும், 30 செ.மீ அகலமும் கொண்ட பாசன வாய்க்கால் – வடிகால்வாய் அமைக்கவும்.

மமட்டி கொண்டு 80 செ.மீ இடைவெளியில் பார் மற்றும் பாத்தி அமைக்கவும். கைக்கொத்து மூலம் பாத்திகளை நன்கு கொத்தி கலக்கி விட்டு, 4 முதல் 5 நாட்களுக்கு மண்ணினைக் காயவிட்டு பின்னர் கருப்பு கருணையை நடவு செய்ய வேண்டும்.

2. எவ்வகை மண் கரும்பு வளர்ச்சிக்கு ஏற்றது?

மணல் கலந்த வண்டல் மண் அல்லது களி வண்டல் மண் வகைகள் கரும்பு வளர்ச்சிக்கு ஏற்றது.

3. சாகுபடு செய்யும் மண் வளத்தை பாதுகாப்பது எப்படி?

மண் வளத்தை ஆராய்ந்து மண்ணின் வளத்திற்கு ஏற்ற பசுந்தாள் உரங்களையும், தொழு உரங்களையும் கலந்து மண்ணிற்கு இடுவதன் மூலம் மண் வளத்தை பாதுகாக்கலாம்.

4. பொருட்களை ஒழுங்காக மக்கச் செய்யவில்லை என்பதற்கு அறிகுறிகள் என்ன?

உரமாக்குதல் கடினம் அல்ல. ஆனால், சில நேரங்களில் செயல்முறையில் ஒரு சிறிய கூடுதல் கவனம் தேவை. சில சு+ழ்நிலைகளை சரிசெய்வதற்கு இங்கே சில எளிய தீர்வுகள் உள்ளன.

உரமாக்கல் முறை மிக நீண்ட காலம் எடுக்கும். குவியல் அளவில் குறையாது அல்லது வெப்பத்தை உருவாக்காமல் இருந்தால், பொருட்களை மட்க வைக்க ஒரு ஊக்குவிப்பான் வேண்டும்.

குவியல் உலர்ந்து இருந்தால், தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும். குவியல் ஈரமாக மற்றும் சேறாக இருந்தால், சு+ரிய ஒளி படும்படி பரப்பி, உலர் பொருளை சேர்க்க வேண்டும்.

அத்துடன், குவியலில் உள்ள பொருட்கள் மிகப் பெரியதாக இருந்தால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். உள்வரும் பொருள்களுடன் கலக்க பழைய உரத்தை சேமித்து வைக்க வேண்டும்.

உர குவியலின் மையம் ஈரமானது, ஆனால் மற்ற மேல் பகுதிகள் உலர்ந்தும் இருந்தால் உர குவியலில் மேல் பகுதியையும், அடிப்பகுதியையும் நன்கு கலங்குமாறு கலக்கி விட வேண்டும். உரத்தில் உள்ள கட்டிகளை உடைத்து விட வேண்டும்.

5. மட்கு உரம் எவ்வாறு மண்ணை மேம்படுத்துகிறது?

மட்கு உரம் பல வழிகளில் மண்ணை மேம்படுத்துகிறது. ஆனால், செயற்கை உரங்களால் அதை செய்ய முடியாது. முதலில், அது அங்ககப்பொருட்களை மண்ணில் சேர்த்து, பின்னர் மண்ணுடன், நீர் ஊற்றுவதற்கு வழி செய்கிறது.

மணற்பாங்கான நிலங்களில் மட்கு உரம் பஞ்சு போல செயல்பட்டு, மண்ணில் நீரைத்தக்க வைப்பதில் உதவுகிறது, இல்லையெனில் செடிகளின் வேர்களை தாண்டி (இந்த வழியில், அது வறட்சிக்கு எதிராகத் தாவரங்களைப் பாதுகாக்கிறது) நீர் சென்று விடும்.

களிமண் நிலத்தில், மட்கும் உரங்கள், சிறிய துளைகள் மற்றும் சிறிய பாதைகளை அமைத்து, மண்ணுக்கு இளகுத்தன்மையை சேர்க்கிறது. இதனால் நீர் தேங்கி நிற்பதை தடுக்கிறது மற்றும் மண் ஒரு செங்கல் பொருள் போல காய்ந்து விடுவதையும் தடுக்கிறது.

பரந்த அளவிலான நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை (பாக்டீரியா, பு+ஞ்சை, முதலியன) மட்கும் உரம் மண்ணிற்கு அளிக்கிறது மற்றும் நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான வாழ்விடத்தையும் தருகிறது.

இந்த நுண்ணுயிரிகள், மண்ணின் தாது பகுதியிலிருந்து சத்துக்களை எடுத்து, இறுதியில் தாவரங்களுக்கு சத்துக்களை அனுப்புகிறது. வினா – விடை வடிவில் மேலும் தகவல்களை தினசரி அறிவிப்புகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்