புண்ணாக்கு
புண்ணாக்கு என்பது எண்ணெய்வித்து பயிர்களில் உருவாகும் விதையில் இருந்து எண்ணையை பிரித்தெடுத்த கழிவு. எந்த வகை புண்ணாக்கில் என்ன சத்துக்கள் உள்ளன என்பது பற்றி பார்ப்போம்.
இந்த புண்ணாக்கில் சத்துக்களை வைத்து விலை மதிப்பதில்லை.
அதன் பயன்பாடுகளை வைத்தே விலை மதிக்கிறார்கள்.
உதாரணமாக கால்நடைகளுக்கு கடலை புண்ணாக்கு கொடுப்பதால் அதன் விலை சற்று அதிகம்.
அதனால் அதில் சத்துக்கள் அதிகமாக இருக்கும் என கணக்கிட வேண்டாம்.
இதோ சில விபரங்கள்
ஆமணக்கு(100 கிலோ) புண்ணாக்கில்
தழைச்சத்து- 5.6 கிலோ
மணி சத்து – 1.8 கிலோ
சாம்பல் சத்து – 2 கிலோ
புங்கன்
தழைச்சத்து – 2.5 கிலோ
மணி சத்து – 1 கிலோ
சாம்பல் சத்து – 1.8 கிலோ
வேம்பு
தலை சத்து – 5.2 கிலோ
மணி சத்து – 1 கிலோ
சாம்பல் சத்து – 1.8 கிலோ
தேங்காய்
தலை சத்து – 3.1 கிலோ
மணிச்சத்து – 1.8 கிலோ
சாம்பல்சத்து-1.2 கிலோ
கடலை
தழைச்சத்து – 7.6 கிலோ
மணி சத்து – 1.5 கிலோ
சாம்பல் சத்து- 1.3 கிலோ
எள்
தலை சத்து – 6.2 கிலோ
மணிச்சத்து – 2 கிலோ
சாம்பல் சத்து- 1.2 கிலோ
மிக முக்கியமான சத்துகளில் ஒன்றான மணிச்சத்து எள் புண்ணாக்கில் மட்டுமே அதிகம்.
ஒரு கணக்கு போடுங்க.
தரமான மரச்செக்கில் ஆட்டிய கடலை புண்ணாக்கு ரூ.40 முதல் 45 வரை
மரச்செக்கில் ஆட்டிய எள் புண்ணாக்கு ரூ.15 முதல் 20 வரை.
ஆனால் எவ்வளவு பேர் எள் புண்ணாக்கு பயன்படுத்துகிறோம் என்றால் இல்லை.
அதனால் விவசாயம் செய்பவர்கள் சற்று சிந்தனை செய்து சில விஷயங்களை அப்படியே கேட்டுவிடாமல் ஆராய்ந்து செய்தால் சுலபமாக வெற்றியடையலாம் என்பது உண்மை.
ஒரு பயிர் பயோர் செய்தவுடன் தேவையான மிக முக்கிய சத்து மணி சத்து.
இது 3 மாத பயிர்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்குள்ளும் வருடாந்திர பயிர்களுக்கு 2 முதல் 3 மாதங்களுக்குள்ளும் கொடுத்து விட வேண்டும்.
அதற்கு மேல் அப்பயிர்கள் எடுத்து கொள்ளாது. அப்படி மிக முக்கியமான சத்துகளில் ஒன்றான மணிச்சத்து எள் புண்ணாக்கில் மட்டுமே அதிகம்.