நிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம்.
புவிதம் பள்ளி

Learn Share Collaborate
நிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம்.
2000 சதுரடி அழுத்தப்பட்ட மண் கற்களை (CSEB) கொண்டு பூசாமல் சுவர்கள் கட்டப்பட்ட அழகிய வீடு
சமீபத்தில், எங்கள் க்ளையண்ட் ஒருவரிடம் பேசும்போழுது சொன்னார் –
நீங்க எவ்ளோதான் சொல்லி புரியவெச்சாலும், யாரையும் மாத்த முடியாதுங்க. ரொம்ப நாளா ஒரே மாதிரி யோசிச்சு மைண்ட் ஃபிக்ஸ் ஆகிருக்கும். நீங்க எடுக்கற முயற்சிலாம் பிரயோஜனம் இல்லாமயே போய்டும்னு சொல்லாம சொன்னாங்க. அவருக்கு நாங்கள் ஆரம்பத்திலிருந்து இதற்கான முயற்சிகள் எடுக்கும் போதிலிருந்தே அவர் எங்களை கவனித்து வருகிறார். ஒரு வெல்விஷராக எங்கள் மீதான அக்கறை தான் அப்படி வெளிப்படுகிறது என்று எனக்கு தோன்றுகிறது.
அவர் சொல்வது சரி தானா? இது நடுநிலையான ஒரு புரிதல் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பல ஆண்டுகளாக கண்டிஷன் செய்யப்பட்ட எண்ண ஓட்டத்தோடு போராடுவது அவ்வளவு எளிதல்ல. அதை நாங்கள் புரிந்தே இருக்கிறோம். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. டெட்டால் -சாவ்லான் மோதிய வரலாறு.
லாரிபேக்கர் முறையிலான வீட்டின் மற்றுமொரு புகைப்பட தொகுப்பு..
எங்களிடம் மண் அல்லது மாற்றுக்கட்டுமானம் பற்றி கேட்கும் போது பேச்சு சிமெண்ட் அல்லது கான்கிரீட் பக்கம் திரும்பும்.நான் கட்டுமான துறையில் பணியாற்றும் போது எனக்குள் எப்போதும் ஒருவிதமான குழப்பம் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது. ஒரு விதமான குற்ற உணர்ச்சியே என்னை உறுத்தியது. ஏதோ தெரிந்தே பாவம் செய்கிற உணர்ச்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. நல்ல வேளை, இப்பொழுதெல்லாம் இதை நினைத்து தூக்கமிழப்பதில்லை.
ஒவ்வொரு புதிய கனவும் மெய்ப்படும் போதும் சரி, அது எதிர்பாராத விளைவுகளையும் நமக்கு பரிசாக தரும். எல்லா புதிய சிந்தனைகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள், கேள்விகள்,கேலிகள் எல்லாம் பரிச்சயமான ஒன்று. இதைத் தாண்டித் தாக்குப் பிடிக்கற சிந்தனைகள் மக்களால் ஏற்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து விடுகிறன
இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண் கட்டுமானங்களில் நீங்கள் – Adobe,SMB,Cob மற்றும் Rammed earth ஆகிய வார்த்தைகளை நீங்கள் ஏற்கனவே என் பதிவில் படித்திருப்பீர்கள். இந்தப்பதிவின் நோக்கம் உங்களை Rammed earth பற்றி மீண்டும் மறக்காமல் பரிச்சயப்படுத்துவது.
லாரிபேக்கரின் கட்டிட முறைகளையும் அவருடைய சிந்தனையையும் சொல்லி கொண்டே இருந்தாலும் அது நிச்சயம் முடியாத,தீராத ஒன்று…
அவருடைய சுவர் கட்டுமான அமைப்பில் முக்கிய பங்கு இந்த காம்போசிட் சுவருக்கு உண்டு.பல கட்டிட சுவர்களை பேக்கர் இம்முறையில் கட்டி உள்ளார்.