Category: Organic Agriculture

பூச்சிகளை வளர விடுங்க

பூச்சிகளை வளர விடுங்க...

பூச்சிகளை வளர விடுங்க…

நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதன் மூலம் வயல்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் வளர்ச்சியை குறைக்க முடியும்.

👉 பொதுவாக பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்கள் பற்றி விவசாயிகளுக்கு தெரிந்திருக்கும்.

👉 ஆனால் நன்மை செய்யும் பூச்சிகள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

👉 அப்படி நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் காணப்படும்.

👉 எனவே அந்த பூச்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.

வயலுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் :

தட்டான் இனங்கள்:

🐞 தட்டான் மற்றும் ஊசி தட்டான் போன்ற பூச்சிகள் வயல்களிலும், வானிலும், நீர்நிலைகளின் மீதும் பறந்து கொண்டே இருக்கும்.

🐞 இந்த பூச்சிகள் வயல்களில் பறந்துச் செல்லும் கொசு மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன.

🐞 தட்டான்கள் தனக்கான இரையை சுற்றிவளைத்து தேடும் திறன் கொண்டதால், வயல்களில் உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளம் புழுக்களை தேடிப்பிடித்து உண்ணும்.

பொறி வண்டு:

🐞 பொறி வண்டுகளில் தாய்ப் பூச்சிகள் பொதுவாக மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் உடலில் கரும்புள்ளிகளுடன் காணப்படும்.

🐞 இதன் வாழ்நாள் 42 முதல் 70 நாள்கள். இந்த வண்டுகள் காய்ப் புழுக்கள், அதன் முட்டைகள், அசுவினி தத்துப் பூச்சிகள், வெள்ளை
அசாசின் வண்டு:

🐞 இந்த வண்டுகள் பொதுவாக நன்செய், புன்செய் பயிர்களில் திடீரென அதிகமாக காணப்படும்.

🐞 அசாசின் வண்டு கழுத்தில் 3 முட்டைகள் இருக்கும். இது 35 நாள்கள் வரை உயிர் வாழக்கூடியது.

🐞 இவைகள் அந்துப் பூச்சிகளையும், புழுக்களையும் தேடி அழிக்கும்.

🐞 உருவத்தில் தன் அளவை விட பெரியதாக உள்ள பூச்சிகளையும் தாக்கும் தன்மை கொண்டது.

சிலந்திகள்:

🐞 சிலந்திகளில் பல வண்ணங்களில் உள்ள பல வகையான சிலந்திகள் அனைத்தும் நன்மை செய்யக்கூடியவை.

🐞 இதுவும் உருவத்தில் தன்னை விட பெரிய பூச்சிகளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

நீள கொம்பு வெட்டுக்கிளி:

🐞 இந்த பூச்சிகள், தன் உடலைக் காட்டிலும் சுமார் 2-3 மடங்கு நீளமுடைய கொம்பு போன்ற உணர் உறுப்பினைக் கொண்டு இருக்கும். இவைகள் பச்சை நிறமுடையது.

🐞 வெட்டுக்கிளி பொதுவாக மற்ற பூச்சிகளை மென்று விழுங்கும் வாய் உறுப்பைக் கொண்டது.

🐞 இவை பூச்சிகளின் முட்டைகள் மற்றும் தத்துப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.

பெதிலிட்ஸ் குளவி:

🐞 பெதிலிட்ஸ் குளவிகள் கருப்புநிறம் உடையது. சிறு எறும்புபோல் இருக்கும்.

🐞 இந்த குளவிகள் காய்ப்புழுக்களை நினைவு இழக்கச் செய்து, அதன் மேல் தன் முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்து, காய்ப்புழுக்களை அழிக்கின்றன.

டாகினிட் ஈ:

🐞 டாகினிட் ஈக்கள் 7 நாட்கள் வரை வாழக்கூடியது.

🐞 இவைகள் கருப்பு அல்லது கருநீலத்தில் இருக்கும்.

🐞 இவைகள் காய்ப்புழுக்களின் மேல் 2 முதல் 4 முட்டைகள் இடும்.

🐞 இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் சிறிய புழுக்கள் காய்ப்புழுக்களஅழிக்கும்.

இந்த நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதன் மூலம் வயல்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் வளர்ச்சியை குறைக்க முடியும்.

தேன் தரும் இந்திய மரங்கள்

தேன் தரும் இந்திய மரங்கள்
தேன் தரும் இந்திய மரங்கள்

1. மதுக்காரை– MADUKKARAI TREE,  RANDIA DUMTORUM – FAMILY: RUBIACEAE (மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிக தேன் உபயம் செய்பவை மதுக்காரை பூக்கள்)

2. நுணா  – TOGARY WOOD OF MADRAS: MORINDA COREIA – FAMILY: RUBIACEAE (தேனீக்களுக்கு தேவைப்படும் மகரந்தத் துகளை தாராளமாகத் தரும் நுணா பூக்கள்)

3. புளியன் மரம் – TAMARIND TREE, TAMARINDUS INDICA, FAMILY: CAESALPINIACEAE (புளியம் பூக்களின் தேன்குடம் எப்போதும் நிரம்பி இருக்கும்)

5. வில்வம் மரம் – BAEL TREE,  AEGLE MARMELOS,FAMILY: RUTACEAE (மகரந்தம் இரண்டையும் கொடையாகத் தரும்)

6. விளா மரம் – WOOD APPLE – FERONIA LIMONIA,FAMILY: RUTACEAE (இனிப்பானது, சுவை தரும் பானம் தயாரிக்கலாம்)

7. வேம்பு – NEEM – AZADIRACHTA INDICA – FAMILY: MELIACEAE ( லேசான  கசப்புள்ள தேனை ஏப்ரல் மே மாதங்களில் தரும்)

8. வாதநாராயணன் – WHITE GULMOHAR – DELONIX ELATA, FAMILY: CAESALPINACEAE (வண்டி வண்டியாய் மகரந்தத்தை வாரித் தரும் மரம்)

9. மாவிலங்கு – SACRED BARNA – CRATEVA MAGNA, FAMILY: CAPARITACEAE  (மார்ச் மாதத்தில் தேன் தரும்)

10. பூவரசு – PORTIA TREE,  THESPESIA POPULNEA, FAMILY: MALVACEAE (நிறைய மகரந்தம் தரும்)

11. புங்கம் – PUNGAN, DERRIS INDICA, FAMILY: FABACEAE (மார்ச் மாதத்தில் தேனீக்களுக்குக் கொண்டாட்டம் ! அது புங்கம் பூக்கும் காலம்)

12. புரசு – FLAME OF FOREST, BUTEA MONOSPERMA, FAMILY: FABACEAE,  (ஏப்ரல் மே மாதங்களில் தேனீக்கள் இந்த மரத்தை வட்டமிடும் காரணம் தேன்தான்)

13. மகிழம் – BULLET WOOD TREE – MIMUSOPS ELENGI, FAMILY: SAPOTACEAE  (ஏப்ரல் மே மாதங்களில் தனது தேன் குடங்களை நிரப்பி வைத்திருக்கும்)

14. குமிழ் மரம் –  KUMIZH TREE,  GMELINA ARBOREA, FAMILY: VERBANACEAE – (தேன் நிரம்ப உள்ள பூக்களைக் கொண்டது)

15. கடுக்காய் – YELLOW MYROBALAN, TERMINALIA CHEBULA, FAMILLY, COMBRETACEAE (தேன் உற்பத்திக்கு அனுசரணையானது)

16. கண்டல் – TRUE MANGROVE, RHIZOPHORA MUCRANATA, FAMILY: RHIZOPHORACEAE (இந்தத் தேன் நச்சுடையது என்கிறார்கள்; வங்க தேசத்தில் இதைத்தான் அதிகம் உற்பத்தி செய்கிறார்கள்)

உலக நாடுகளில் தேன் உற்பத்தியில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது; முதல் இடத்தில் இருப்பது சீனா.
இயற்கைத் தேன் ஏற்றுமதியில் நாம் 13 வது இடத்தில் உள்ளோம்;அதிலும் சீனா முதலிடத்தில் உள்ளது; ஏற்றுமதி, தரம், சுவை என்ற மூன்றிலும் முதலிடத்தில் உள்ளது சீனா.

பூமி ஞானசூரியன், செல்பேசி:+918526195370

மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள்

மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள்

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா?

நண்பர்களே எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன்.

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது.

இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

மேல்நோக்கு நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் ( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.

அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள்.

இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் I போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

கீழ்நோக்கு நட்சத்திரங்கள்:

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள்,
( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள். இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

சமநோக்கு நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும்
( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள். இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.

நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு முறையில் இருக்கும்.

பலதானிய விதைப்பு முறை

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் :

1.பலதானிய விதைப்பு முறை:

இயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்கும் விவசாயிகள் செய்ய வேண்டிய முதல் காரியம் பல தானிய விதைப்பு முறை. இரசாயன உரங்களின் தொடர் பயன்பாட்டால் வளமிழந்து போன நிலத்தை, 200 நாட்களில் வளம்மிக்க நிலமாக மாற்றலாம். இதைத்தான் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்தார். 1 ஏக்கர் நிலத்திற்கு பல தானிய விதைப்பு பற்றி காண்போம்.

1. தானிய வகை நான்கு:

சோளம் – 1 கிலோ
கம்பு – 1/2 கிலோ
தினை – 1/4 கிலோ
சாமை – 1/4 கிலோ
2. பயிர் வகை நான்கு:

உளுந்து – 1 கிலோ
பாசிப்பயிர் – 1 கிலோ
தட்டப்பயிர் – 1 கிலோ
கொண்டைகலை -1கிலோ
3. எண்ணெய் வித்துக்கள்:

எள்ளு – 1/2 கிலோ
நிலக்கடலை – 2 கிலோ
சூரியகாந்திவிதை – 2கிலோ
ஆமணக்கு – 2 கிலோ
4. பசுந்தாள் பயிர்கள்:

தக்கப்பூண்டு – 2 கிலோ
சணப்பு – 2 கிலோ
நரிப்பயிர் – 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ
5. நறுமணப் பயிர்கள் :

கடுகு – 1/2 கிலோ
வெந்தயம் – 1/4 கிலோ
சீரகம் – 1/4 கிலோ
கொத்துமல்லி – 1 கிலோ
மேற்சொன்ன 20 விதைகளும் வெறும் உதாரணம். இவற்றை அப்படியே கூறியவாறு விதைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவரவர் பகுதியில் கிடைக்கும் விதைகளை, ஒவ்வொறு வகைக்கும் நான்கு தானியம் வீதம் எடுக்கவும். அளவு கூட குறைய இருக்கலாம். இந்த 5 வகை தானியங்களை கலந்து ஒரே நேரத்தில் நிலத்தில் விதைக்க வேண்டும். விதைகளில் இருந்து வளர்ந்த பயிர்கள் 45 முதல் 50 நாட்களில் பூக்க ஆரம்பிக்கும். அப்போது செடிகளை அப்படியே மடக்கி உழவு போடவும். இவை மக்கி நுண்ணுயிர் பெருகும். இதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து சமச்சீராக இருக்கும். பல தானிய விதைப்பு முறையை 2 அல்லது 3 முறை செய்யலாம்.

கத்திரியில் தண்டு துளைப்பான்

கத்தரியில் புழுக்களற்ற காய்கள் brinjal-eggplant-agriwiki

கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களை இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கட்டுப்படுத்துவது சரியான முறையாகும்
கத்திரி சாகுபடி செய்யும் பகுதியில தண்டு துளைப்பான் மிகப்பெரும் சேதத்தை உண்டாக்கும் பூச்சியாக உள்ளது.

Continue reading

காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த

காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த chilli

20 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த கரைசலை செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை தடுக்கலாம்.

மிளகாயில் பூசணநோய்த் தாக்குவதால் பூக்கள் பூத்தவுடன் கீழே கொட்டிப் போய்விடும். இதனைக் கட்டுப்படுத்த மாலை வேளைகளில் தோட்டங்களில் சாம்பிராணி புகை போடுவதால் பூஞ்சாண நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம்.

Continue reading

பாகற்காய் சாகுபடி

பாகற்காய் சாகுபடி

பாகற்காய் சாகுபடி பொதுவாக விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்தான். வியாபார ரீதியாக சாகுபடி செய்வதற்கு நீட்டு பாகற்காய் மிக சிறந்ததாகும்.

பாகல் சாகுபடி எப்படி லாபம் தரும்?

பாகல் சாகுபடிக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுகிறது.

வேலை ஆட்கள் அதிகம் தேவை இல்லை.

களை குறைவான பயிர்.

அதிக செலவு செய்து பந்தல்போட்டு பாகல் சாகுபடியை விவசாயிகள் செய்கிறார்கள். இந்த பந்தல்களை ஐந்து முறைகள் சாகுபடி செய்வதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் சாகுபடி செய்யலாம்.
பாகல் சாகுபடி செய்ய நல்ல புழுதி உழவும், தொழு உரமும் அவசியம் தேவை.

ரகங்கள்:

சங்ரோ விவேக், செமினிஸ், அபிஷேக், நுண்கம்ஸ், அம்மன்ஜி, மஹிக்கோ, வென்சுரா, எம்ஏஎச்101, அங்கூர் பராக் போன்ற ரகங்கள் பாகல் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.
பாகல் வயது 160 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை ஆகும்.
விதை ஏக்கருக்கு 300 கிராம் தேவைப்படுகிறது.

பயிர் எண்ணிக்கையை பராமரிக்க எளிய முறை

விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தான் நடவுசெய்ய வேண்டும். ஏனெனில் இதன் சதைப்பற்று கடினமாக இருக்கும்.இதனால் விதை மேலேயே நின்றுவிடும்.
விதைகள் ஈரப்பதம் கிடைக்காமல் முளைப்புத்திறன் குறைய வாய்ப்பு உள்ளது. மேலே இருந்தால் எலிகள், அணில்கள் தோண்டி எடுத்து வீணாக்கிவிடும்.
இதைக் கருத்தில் கொண்டு சுமார் 30 மணி நேரம் ஊறவைத்த விதைகள் நடவு செய்யும்போது விதைகள் வீணாவது குறைவு.

ஒரு விதை ஒரு ரூபாய் ஆகின்றது. இதனால் இந்த எளிய தொழில்நுட்பத்தை பின்பற்றினால்தான் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

நடவுமுறை:

பொதுவாக தனி பயிர்தான் பாகல் சாகுபடியில் உள்ளது. வரிசை முறையில் 7 அடி து 7 அடி இடைவெளிவிட்டு வாய்க்கால் அமைத்து அந்த கரை மீதுதான் விதை நடவு செய்வார்கள்.
தண்ணீர் வசதி மண்வளத்திற்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும். இதில் முன்னோடி விவசாயிகள் உளுந்தை வரிசையில் வாய்க்கால் வரப்பு ஓரங்களில் சாகுபடி செய்து 70 நாட்களில் 200 கிலோ வரை மகசூல் எடுத்து சாதனை படைத்த விவசாயிகள் உள்ளனர்.

இதில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்யும் போது அசுவணி பூச்சி பாகலில் குறைவாக உள்ளது. 70 நாட்கள் உளுந்தை அறுவடை செய்தபின்னர்தான் பாகல் கொடிகள் பந்தலில் படர ஆரம்பிக்கும்.

அப்போது விவசாயிகளின் வசதியை ஒட்டி சவுக்கு மிலார் பந்தல், மூங்கில் பந்தல், நைலான் ஒயர் பந்தல், கல் நடவு செய்து சாகுபடி செய்வார்கள். மேற்கண்ட பந்தல்கள் சுமார் ஐந்து வருடங்கள் வரை உபயோகிக்கலாம்.

காய்களின் நிறம், சந்தை நிலவரம்:

விற்பனையின்போது கிலோ ரூ.40 என்றால் நுகர்வோர்கள் கால் கிலோதான் வாங்க விரும்புவார்கள். ஆனால் ஒரு காயின் எடை 150 முதல் 200 கிராம் வரை இருக்கும். ரகங்களால்தான் விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும். 250 கிராம் காய் வாங்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும்.

பாகல் சாகுபடி செலவு:

உழவு, பார் அமைப்பு ரூ. 5,000.00
விதை, உரம், பயிர் பாதுகாப்பு ரூ. 5,000.00
நீர் நிர்வாகம், காவல், களை ரூ. 6,000.00
பந்தல்முறை, பிளாஸ்டிக் ரோப் ரூ. 15,000.00
அறுவடை + போக்குவரத்து (60 நாட்கள்)
ரூ.18,000.00
மொத்த செலவு ரூ. 49,000.00

 

பாகல் சாகுபடி வருமானம்:

உளுந்து ஊடுபயிர் சாகுபடி செய்து கூடுதல்
மகசூல் கிடைத்தால்
= 200 கிலோ து ரூ.50 வரவு ரூ. 10,000.00

பாகல் சாகுபடியில் 60 நாட்கள் அறுவடையில்
10 டன் மகசூல். விற்பனை விலை ரூ.10 என்று
கணக்கில் எடுத்துக்கொண்டால் 10 டன் து ரூ.10
ரூ.1,00,000.00

உளுந்து சாகுபடியில் கிடைத்த மகசூல் ரூ. 10,000.00
மொத்த வருமானம் ரூ. 1,10,000.00

பாகல் சாகுபடி மொத்த செலவு ரூ. 49,000.00
நிகர லாபம் ரூ. 61,000.00

பாகல் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைக்க வழிகள்:

வீரிய ரகங்கள் அனைத்தும் பலாப்பழத்தில் எப்படி மேல்பகுதி முழுவதும் முள் போன்று உள்ளதோ அதுபோன்று முட்கள் பகுதி பாகலில் உள்ளது.

கோணியில் பேக்கிங் செய்து கோணியில் அடுக்கி அனுப்பும்போது இந்த முட்கள் போன்ற பகுதி உடையாதவண்ணம் அனுப்பினால்தான் பார்ப்பதற்கு காய்கள் பசுமையாக இருக்கும். இல்லையேல் தரம் இரண்டு என்று விலை குறைய வாய்ப்பு உள்ளது.

வேன்களில் செல்லும்போது மூடைகள் அதிக உயரம் அடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கவனிப்பு நம்முடைய உற்பத்தி பொருள் கூடுதல் விலை கிடைப்பதற்கான வழிகளாகும்.

Brittoraj