மண்வளம் பெருக பசுந்தாள் உரம்

மண்வளம் பெறுக பசுந்தாள் உரம்:

மண்வளம் பெருகவும், அதிக மகசூல் பெற சுந்தாள் உர பயிர் சாகுபடி செய்யலாம்.

அதிக மகசூல் பெற வேண்டும் என்றால் இயற்கை உரங்களை மண்ணில் இட வேண்டும். இதில் முக்கிய பங்குவகிப்பது பசுந்தாள் உரங்கள் மற்றும் பசுந்தழை உரங்களாகும்.

நடப்பு சம்பா சாகுபடிக்கு ஒருசில இடங்களில் பரவலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நாற்றுகள் விடப்பட்டு 20 முதல் 30 நாள் வயதுடைய பயிர்களாக உள்ளன.
நாற்று விடப்பட்ட இடங்களை தவிர்த்து மீதமுள்ள சாகுபடி நிலப்பரப்பில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.

பசுந்தாள் உரத்தில் தக்கை பூண்டு, கொளிஞ்சி, அகத்தி, சீமை அகத்தி, பிள்ளிபயிர் சிறந்தவையாகும்.
பயிர்வகை இனத்தை சேர்ந்த பசுந்தாள் உர பயிர்கள் காற்றில் உள்ள தழைசந்ததை கிரகித்து 70 சதவீதம் வரை வேர்முடிச்சுகளில் நிலைநிறுத்தி அதில் ஒருபகுதியை மண்ணில் சேர்ப்பதால் நிலம் வளமடைகிறது. மண் அரிப்பை தடுத்து மேல் மண் இழப்பை தடுக்கிறது.

மண்ணுக்கு வளம் சேர்ப்பது மட்டுமல்லாமல் பிடிப்பு பயிராகவும், நிழற்பயிராகவும், மூடு பயிராகவும், தீவன பயிராகவும் பயன்படுகிறது.
மண்ணின் கரிம பொருட்களை அதிகரிக்க செய்கிறது.
பசுந்தாள் எருவானது பயிரின் பேரூட்ட சத்தான தழைசத்து மண்ணில் இருந்து நீர் மூலம் விரயமாவதை தடுத்து நிறுத்த உதவுகிறது.

நுண்ணூட்ட சத்துகளை உறிஞ்சி தன்னுடன் வைத்து கொண்டு பிறகு மண்ணில் உள்ள பயிருக்கு தேவைப்படும் போது எளிதில் கிடைக்க செய்கிறது.

எனவே அனைத்து விவசாயிகளும் பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது மண்வளம் பெருகியுள்ள நிலத்தில் சாகுபடி செய்து அதிகமகசூல் பெறலாம்.

கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் – 6

கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் – 6

தீவனத் தேவை :

வெள்ளாடுகளுக்கு எவ்வளவு தீவனம் தேவை?

வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும் என்று குறிப்பிட்டேன். நமது பகுதி ஆடுகள் சராசரி 25 கிலோ எடையே இருக்கின்றன. (பொலி கிடாக்கள் மற்றும் சமுனாபாரி போன்ற இன ஆடுகளின் எடை கூடுதலாக இருக்கும்.

ஆகவே, 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும். இதனைப் பசுந்தழை, உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனமாகக் கீழ் வருமாறு வழங்கலாம்.

காய்வு நிலையில் :

பசுந்தழை / புல் 3 கிலோ காய்வு நிலையில் 0.75 கிலோ

உலர் தீவனம் 300 கிராம் காய்வு நிலையில் 0.25 கிலோ

கலப்புத் தீவனம் 250 கிராம் காய்வு நிலையில் 0.24 கிலோ

காய்வு நிலையில் மொத்தம் 1.24 கிலோ

பொதுவாகத் தீவனம் அளிப்பது பற்றிக் குறிப்பிட்டோம். சிற்றூர்களில், பகுதிக்கு ஏற்றாற்போல், சாமானிய ஆடு வளர்ப்போர் பல்வேறு தீவனங்கள் அளிப்பார்கள். அது பற்றியும் சிறிது குறிப்பிடாவிட்டால், செய்திகள் பெரும் பண்ணை வைத்திருப்போருக்கு மட்டுமே என்றாகிவிடும்.

புளியங்கொட்டை :

இது சிறந்த ஆட்டுத் தீவனம். தோல் நீக்கி, அரைத்துத் தீவனமாகக் கொடுக்கலாம். வீட்டில் உள்ள புளியங்கொட்டையை மலிவான விலைக்கு விற்றுவிட்டு, அதிக விலையில் ஆட்டுத் தீவனம் வாங்குவது சரியில்ல.

வேலிக் கருவை நெற்றுகள் :

இதுவும் தானியத்திற்கு ஈடான சிறந்த ஆட்டுத் தீவனம். இதில் 15 / 25% சர்க்கரைப் பொருள் உள்ளதால், தினம் 100 / 200 கிராம் மட்டுமே கொடுக்கலாம். சாமானியர்கள் இந்நெற்றுகளை சேகரித்து வைத்து சிறிது சிறிதாகத் தீவனமாக அளிக்கலாம்.

எள்ளு பிண்ணாக்கு :

இதுவும் சிறந்த பிண்ணாக்கு. கறவை மாடுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளாடுகளுக்கும் ஏற்றது.

தேங்காய் பிண்ணாக்கு :

இதில் புரதம் சற்றுக் குறைவே. மேலும் விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்டது. இது பெருமளவில் கலப்புத் தீவனம் உற்பத்தி செய்வோருக்கு நேரடியாக எண்ணெய் ஆலையிலிருந்து அனுப்பப்பட்டு விடுகின்றது. எங்கும் தாராளமாகக் கிடைப்பதில்லை.

சோயா பிண்ணாக்கு :

தற்போது சோயா மொச்சை நம் நாட்டில் பயிரிடத் தொடங்கியுள்ள நிலையில் சோயா பிண்ணாக்கும், ஓரளவு கால்நடைத் தீவனமாகக் கிடைக்கின்றது. இது கடலைப் பிண்ணாக்கைப் போலச் சத்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், நச்சுப் பூஞ்சக் காளானால் இது பாதிக்கப்படுவதில்லை. ஆகவே இது உயர்ந்ததாகும்.

பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு :

முன்பு பருத்திக் கொட்டை பெருமளவில் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கிடைத்து வந்தது. மனிதத் தேவைக்கு எண்ணெய் கிடைக்காத சூழ்நிலையும், பலவகை எண்ணெய்களை வாசனையற்றுச் சுத்திகரிக்கும் சூழ்நிலையும், பருத்திக் கொட்டையை எண்ணெய் வித்தாக மாற்றி விட்டது. இப்போது பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு கிடைக்கின்றது. இதுவும் சிறந்த வெள்ளாட்டுத் தீவனமே. இதில் பைபாஸ் புரதம் (By Pass Protein) அதிகம் உள்ளது.

அரிசித் தவிடு :

இது சிறந்த வெள்ளாட்டுத் தீவனம் உமி கலவாமல், நன்கு சலித்துத் தீவனமாக அளிக்க வேண்டும். தற்போது வீடுகளில் கிடைக்கும் நெல் தவிர ஆலைகளிலிருந்து நெல் தவிடு வெள்ளாட்டுத் தீவனமாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கும் சூழ்நிலையிலும், உமி கலந்ததாகவே உள்ளது. இப்போது நெல் தவிட்டிலிருந்து பெருமளவில் எண்ணெய் எடுப்பதால் எண்ணெய் நீக்கிய தவிடு, கலப்பினத் தீவனம் தயாரிப்போருக்குக் கிடைக்கின்றது. தவிட்டில் உள்ள உமி, வெள்ளாட்டுக் குடலில் அழற்சியை உண்டு பண்ணும்.

கோதுமை தவிடு :

இது சிறந்த தீவனமாகும். இது அதிக விலையில் விற்றாலும் எங்கும் கிடைக்கின்றது. இதனைப் பண்ணையாளர்கள் கலப்புத் தீவனம் தயாரிக்க நன்கு பயன்படுத்தலாம்.

தானிய வகைகள் :

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நவ தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மலிவாக இருக்கும் தானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நெல் மட்டும் விளையும் பகுதியில் அரிசி நொய் சேர்த்துக் கொள்ளலாம். யாவருமே அரிசியையே விரும்பி உண்ணத் தொடங்கிய சூழ்நிலையில் நவ தானியங்களைக் கால்நடைத் தீவனத்தில் சேர்த்துக் கொள்ளலாம். சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு போன்றவை சிறந்தவை.

இது தவிரப் பயறு வகைகளில் கொள்ளு (காணம்) பொதுவாக மலிவான விலையில் கிடைப்பதால், இதனையும் அரைத்துத் தீவனத்தில் சேர்க்கலாம். இதன் காரணமாகப் பிண்ணாக்கு அளவைக் கலப்பது தீவனத்தில் குறைக்கலாம். எண்ணெய்க்காக எண்ணெய் வித்துக்கள் செக்கில் ஆட்டப்படும்போது கிடைப்பது பிண்ணாக்கு. எல்லாவிதப் பிண்ணாக்கும் வெள்ளாடுகளுக்கு ஏற்ற தீவனமாகாது. எல்லாவித எண்ணெயும் மனிதனுக்கு ஆகாததுபோலச் சத்து மிகுந்ததும், நச்சுத் தன்மை அற்றதும், நம் பகுதியில் கிடைப்பதுமான பிண்ணாக்குகள் குறித்துப் பார்க்கலாம். பொதுவாகத் தழையில் கிடைக்காத பாஸ்பரஸ் இவற்றில் அதிகம் கிடைக்கும்.

கடலை பிண்ணாக்கு :

இதை பிண்ணாக்குகளின் அரசன் எனலாம். இதில் எவ்வளவு புரதம் உள்ளது. அரசர்களுக்கே ஆபத்தான காலம் இது. இந்தப் பிண்ணாக்கு அரசனுக்கும் ஓர் ஆபத்து. ஈரம் மிகுந்த பகுதியில் சேமிக்கப்படும் அல்லது தரம் குறைந்த வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் கடலைப் பிண்ணாக்கில், அப்ஸோடாக்சின் என்னும் நச்சுப் பொருள் உள்ளது. இது ஒரு வகைப் பூஞ்சைக்காளானால் (Aspergillus flavus) உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆகவே தரமான பிண்ணாக்கு வாங்கி ஈரமற்ற இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். ஆகவே மிக உயர்ந்த இக்கால்நடைத் தீவனம் அளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் சொல்கிறனேயன்றி வேறல்ல. பிண்ணாக்கு என்றாலே கடலைப் பிண்ணாக்கே யாவரும் பயன்படுத்துவது, சிறந்தது, புரதம் 44% கொண்டது.

மேலும் கடலைப் பிண்ணாக்கு மாடுகள் எருமைகளுக்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படும் அளவிற்கு வெள்ளாட்டிற்குச் சிறந்ததல்ல என்று கூறும் ஆசிரியரும் உண்டு.

கலப்புத் தீவனம் :

வெள்ளாடுகளுக்கு மாடுகளைப் போன்று அதிக அளவில் கலப்புத் தீவனம் பண்ணையாளர்களுக்கு அதிகச் செலவை உண்டு பண்ணும். பெரும் பாலும் வெள்ளாடுகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கப்படுவதில்லை. ஆடு வளர்ப்பவர்கள் சிலர் வீட்டில் மீதியாகும் சிறிதளவு சோறு, தவிடு ஆகியவற்றைக் கொடுப்பார்கள். இச்சூழ்நிலையில் ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். பலர் வீட்டில் விருந்தின்போது மீதியாகும் சோறு, பலகாரங்கள் ஆடு மாடுகளுக்குக் கொடுத்து விடுவார்கள். இதனால் பல வெள்ளாடுகள் இறந்துள்ளன. வெள்ளாடுகள் நம்மைப் போன்று சோறு சாப்பிடும் இனம் அல்ல. வெள்ளாடுகளின் பெருவயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள் லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்து அதன் காரணமாக இறக்க நேரிடும். சாதாரணமாக 100 – 150 கிராம் சோறு எதுவும் பாதிப்பை ஏற்படுத்தாது. பெரு வயிற்றுலுள்ள புரோட்டோசோவா என்னும் ஒற்றைச்செல் உயிரினங்கள் இவற்றை விழுங்கிப் பெருமளவில் அமிலம் வெளியாவதைத் தடுத்து நன்மை செய்துவிடும்.

பொதுவாக, ஆழ்கூள முறையில், அதிக எண்ணிக்கையில் வெள்ளாடு வளர்ப்பவர்கள் கலப்புத் தீவனங்களைத் தாங்களே தயாரித்துக் கொள்ளலாம். தவிடு, பிண்ணாக்கு, நவதானியம் ஆகிய மூன்றும் கீழ்க்காணும் விதத்தில் கலந்து தீவனம் தயாரிக்கலாம். இதில் 1% உப்பு, 2% தாது உப்புக் கலவை சேர்க்கப்பட வேண்டும். ஆகவே

தானியம் 50%
பிண்ணாக்கு 20%
தவிடு 17%
தாதுஉப்பு 2%
உப்பு 1%

என்னும் வீதத்தில் வெள்ளாடுகளுக்குக் கலப்புத் தீவனம் தயாரிக்கலாம். கலப்புத் தீவனத்தில் 12 – 15% செரிக்கும் புரதமும், 60 – 70 மொத்தச் செரிக்கும் சத்துக் கூறும் இருக்க வேண்டும்.

வேர்க்கடலைக் கொடி :

கடலைக்கொடி, கடலை பயிரிடும் தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், ஆடு மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுவும் ஒரு சிறப்பு காய்ந்த தீவனமாகும். பயிரில் சிவப்புக் கம்பளிப் புழு தாக்குதல், கடலை உற்பத்தியைப் பாதிப்பதுடன், ஆடுகளுக்குப் பெருந் தீவனப் பஞ்சத்தை உண்டாக்குகின்றது.

துவரை இலை :

தற்போது துவரம்பருப்புடன் சத்துமிகு தழை வழங்கும் மாத்துவரை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில் புன்செயில், துவரை பல பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. பயிர் விளைந்து துவரையை வெட்டித் துவரைப் பருப்பைப் பிரிக்கும்போது, உதிரும் இலை, நெற்றுக் கூடுகளை ஆடுகளுக்குத் தீவனமாக சேர்த்து வைக்கலாம். இந்த தவிரப் பருத்திச் சாகுபடிப் பகுதிகளில் பருத்தி இலைகளையும், சேகரித்துத் தீவனமாக அளிக்கலாம். இது போன்றே மொச்சை, அவரைச் செடிகளில் உதிர்ந்த இகைளை வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.

உலர் தீவன அவசியம் என்ன? பொதுவாக அசைபோடும் கால்நடைகள், சிறப்பாக வெள்ளாடுகள் பசுந்தீவனத்தை மட்டும் உண்டு அவற்றின் முழுத் தீவனத் தேவையையும் நிறைவு செய்துவிட முடியாது போகலாம். முக்கியமாக அவற்றிற்குத் தேவைப்படும் அளவு காய்வு நிலைத் தீவனத் தேவை (Dry Matter) அடைய முடியாது போகும். ஆகவே, அவற்றின் பசி அடங்காது. வயிறு நிறையத் தீவனத்தைத் தின்றுவிட்டு, அதற்கு மேல் தின்ன முடியாது இருக்கும் வெள்ளாடுகள் இரவில் பசியால் துன்புறும். காரணம், பசுந்தீவனம் பெரு வயிற்றின் இடத்தை அடைத்துக் கொள்ளும். ஆகவே மாடுகளுக்கு இரவில் சிறிதளவு காய்ந்த தீவனம் அரைக்கிலோ கொடுக்கலாம் அல்லது பகல் வேளையில் பாதியும் இரவில் பாதியுமாகக் கொடுக்கலாம்.

தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி

குதிரைவாலி

குதிரைவாலி

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

கோ 1, கோ(குதிரைவாலி)2 ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

மானாவாரியாக பயிரிட செப்டம்பர் – அக்டோபர் மாதங்கள் ஏற்றது. பாசனப்பயிராக பயிரிட பிப்ரவரி – மார்ச் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும்.

மண்

குதிரைவாலி தண்ணீர் தேங்கிய ஆற்றுப் படுகையில் ஒரளவிற்கு வளரக்கூடியது. இது மணல் கலந்த களிமண் நிலங்களில் நன்கு வளரக்கூடியது. கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

நிலம் தயாரித்தல்

கோடையில் நிலத்தை 2 முறை கலப்பையை கொண்டு உழுது பக்குவப்படுத்தி கொள்ளவேண்டும். கடைசி உழவின் போது தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும். பாசனபயிராக இருந்தால் தேவையான அளவில் பார்கள் அமைக்க வேண்டும்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 8-10 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைத்தல்

விதைகளை தெளித்தல் (அ) தயார் செய்துள்ள பாரில் 3-4 செ.மீ துளையிட்டு விதைக்கலாம். விதைக்கும் போது வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ.மீ விட வேண்டும்.

நீர் நிர்வாகம்

பொதுவாக குதிரைவாலிக்கு நீர்பாசனம் தேவையில்லை. வறண்ட சூழ்நிலை நிலவினால் பூங்கொத்து வரும் தருணத்தில் ஒருமுறை நீர்பாசனம் அளிக்கவேண்டும். அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்றவேண்டும்.

மஞ்சள் நிற ஒட்டுப் பொறி

மஞ்சள் நிற ஒட்டுப் பொறி.

பழைய டால்டா டன்கள்ல மஞ்சள் நிறத்தில் தடவி, அதுமேல விளக்கெண்ணெய் அல்லது கிரீஸை தடவி, ஒரு ஏக்கருக்கு 5 இடம்கிற கணக்குல, உயரமா குச்சியை நட்டு அதுமேல கவுத்து வெச்சிடணும்.

மஞ்சள் நிறத்தால கவரப்பட்டு பக்கத்துல வர்ற அசுவுணி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் ஆகிய பூச்சிகள் டப்பா மேல ஒட்டிக்கிட்டு இறந்து போகும்.

விளக்கு பொறி

விளக்கு பொறி:

வயல்ல 3 அடி உயரத்துல பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லனா கண்டுபல்லைத் தொங்க விடணும்.

விளக்குக்கு கீழ இரும்புச் சட்டியை வெச்சு, அதுல தண்ணீயை ஊத்தி, ரெண்டு சொட்டு மணணெண்ணெயையும் கலந்து விட்டுடணும்.

இந்த விளக்கு வெளிச்சத்துக்கு வர்ற பூச்சிகள், விளக்கைச் சுத்தி வட்டமடிச்சு பார்த்துட்டு, கீழு இருக்கற சட்டியில விழுந்து இறந்து போகும்.

விளக்கு பொறியை சாயங்காலம் 6 மணியிலிருந்து 9 வரைக்கும்தான் வெக்கணும்.
அதுக்கு மேல நன்மை செய்ற பூச்சிகளோட நடமாட்டம் அதிகமாயிடும்.

Agri Intex 2017

விவசாய செய்திகள்

👉 கடந்த முறை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை காண தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த வருடம் இந்தியாவின் மாபெரும் வேளாண் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.

👉 விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு முற்றிலும் பயன்படும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அக்ரி இன்டெக்ஸ்,
ஜூலை 14 முதல் 17 வரை,
கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,
கோயமுத்தூர் – 641014
தொலைப்பேசி எண்
75028-22000

83449-22000

முக்கிய அம்சங்கள் :

👉 விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள்

🐠 மீன் வளர்ப்பு

🌱 பசுமை விவசாயம் மற்றும் தாவர பாதுகாப்பு

🌾 பயோடெக்னாலஜி

🌳 பசுமை வீடு

🍁 உரங்கள் மற்றும் இரசாயனங்கள்

🍀 மறுசுழற்சி சக்தி

🌷 மலரியல்

🐓 கோழி வளர்ப்பு

💦 பாசன மற்றும் நீர் தொழில்நுட்பம்

🍀 விதைகள் மற்றும் செடி வளர்ப்பு சாதனங்கள்

🐄 கால்நடை மற்றும் பால்பண்ணை தொழில்நுட்பம்

🍃 துல்லிய விவசாயம்

🍂 கிராமப்புற வளர்ச்சி

👉 வெளிநாட்டினரின் சிறப்பு அரங்குகள்

👉 ஆகிய அனைத்து முக்கிய அம்சங்களையும் கொண்டு ஒரு புது பொலிவுடன் விவசாய கண்காட்சி உதயமாக உள்ளது.

👉 விவசாயத்தை காக்கவும், விவசாய தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து தகவல்கள், உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை ஒரே இடத்தில் காண வேண்டுமா…. விரைந்திடுங்கள் ஜூலை 14 அன்று கோவைக்கு…

👉 உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தாங்கி கொள்ள தயாராக உள்ளது கொடிசியா வளாகம்….!!

விவசாய நண்பர்களுக்கு

விவசாய நண்பர்களுக்கு வணக்கம்.
இங்கு தங்களுக்கு ஒரு புதிய செய்தியை சொல்ல விரும்புகிறோம்.
மேலே உள்ள GO வை முழுமையாக படித்து பாருங்கள்.
1000பேர் கொண்ட குழுக்கள் இப்போது சுருங்கி குறைந்த பட்ச விவசயிகளிஒருங்கிணைத்து குழுக்கள் அமைத்து அரசு சலுகைகளை பெற்று திறம்பட தொழில் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
விவசாயிகள் இதுபோன்ற சலுகைகளை பயன்படுத்தி அடுத்த பரிணாம வளர்ச்சியை எட்ட வேண்டும்.
கூடி வாழ்ந்தால் கோடி நம்மை.
இனி தனி மனிதர் வெறும் பேச்சால் மட்டுமே இருக்கமுடியும் அன்றி சிறப்பாக இயங்க வாய்ப்புகள் குறைவு.
தங்கள் போக்கிற்கு ஒத்து செயல்படும் விவசாயிகளை ஒருங்கிணைத்து தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டி தங்கள் ஊரிலோ அல்லது அருகில் உள்ள நகரத்திலோ விற்பனைசெய்து தங்கள் பொருளுக்கு அதிகபட்ச விலையை தாங்களே நிர்ணயம் செய்து பயனடைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
உணவு பொருட்கள் மட்டுமே அன்றி நாம் விவசாய உற்பத்தி பொருட்கள் எதை வேண்டுமானாலும் ஏற்றுமதிசெய்யவோ, இயந்திரங்கள் கொண்டு மதிப்புகூட்டவோ, மொத்த வியாபாரத்தில் ஈடுபடவோ, உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கவோ வழிவகை உண்டு. இதற்கெல்லாம் ஒரே மூலதனம் ஒற்றுமை மற்றும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை.
இதை மூலதனமாக வைத்துக்கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இது சாதாரண செயல் அல்ல.
ஆனால் செயல்படுத்திவிட்டால் வெற்றி நிச்சயம்.
முதலில் ஒத்த கருத்துகள் கொண்ட 10 நபர்கள் ஒன்றிணைந்து குழுக்களை உருவாக்கி, நன்றாக இயங்கக்கூடிய குழுக்களை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து செயல்படலாம்.
இதற்கென ஆலோசனை வழங்க தனி நபரை ஆலோசகராக அரசு நியமித்து உள்ளது. அவர்களை கலந்தாலோசித்து தங்களை சரியான பாதையில் வழிநடத்தி செல்ல வழிவகை செய்து கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
அரசு சலுகைகளை எதிர்பாராமல் 10 நபர்களுடன் உருவாக்கப்பட்ட நமது
பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
இன்று 6 மாத காலத்தில் 30 நபர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலில் ஈடுபட்டு நமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள விவசாயிகள் இனி ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். சிக்கல்கள் வராதா என்றால் வாடும் என்றே சொல்லலாம். ஒரு குடும்பத்தில் பிறந்த நாம் கருத்துவேறுபாடுகள் கொண்டு இருப்பதை நாம் தினம் தினம் பார்த்து தானே வருகிறோம்.
அப்பபை இருக்க வேறு வேறு மன ஓட்டம் கொண்ட நபர்கள் இணையும்போது கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. அவற்றை களைந்து அதில் இருந்து மீண்டு எழுந்து செயல்படும் குழுக்கள் வெற்றி அடையும்.நன்றி.